1. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆயக்கட்டு பகுதியில் பாலம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது எனக் கோரிய மனுவில் சிவகங்கை  பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு.

 

 2. நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் போது நிலுவை வழக்கு விபரங்களை இணைப்பது குறித்த வழக்கில் தமிழக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு.

 

3. தமிழ்நாடு முதல்வரை தரக்குறைவாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முத்துராமன் தாக்கல் செய்த வழக்கில், அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறாக பேச மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

 

4. நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தீவைத்து எரித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

 5. திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள் பாலியல் வழக்கு கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் பழனி சிறையில் அடைக்கப்பட்டார்.

 

6. தேனி , திண்டுக்கல் , ராமநாதபுரம், மதுரை , சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணை 142 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது.  நீர் திறப்பு 2300 கன அடி நீர் வரத்து 2100 கன அடியாக உள்ளது.

 

7. நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளியை சேர்ந்த கணபதி மகன் ஆறுமுகம்(40). இவருக்கும் இதே ஊரை சேர்ந்த மாசானத்துக்கும் சில நாட்களுக்கு முன்பு மாடு மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த முன்விரோதத்தில், நேற்று இரவு மாடு மேய்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த ஆறுமுகத்தை ஊர் எல்லையில் மாசானமும் மற்றொருவரும் வழிமறித்துள்ளனர். அப்போது மாசானம் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

8. நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் சட்டவிரோதமாக பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலையை கடத்த முயன்ற லோடுமேன், ஓட்டுநர் கைது. கூடன்குளம் காவல் ஆய்வாளர் விசாரனை. கடத்தலுக்கு பயன்படுத்திய மினிடெம்போ  வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

9.தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நெல் விவசாயம், வாழை விவசாயம் முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது


 

10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும்  7 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75511-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 16 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 74224-ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1183 இருக்கிறது. இந்நிலையில் 104 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.