• மதுரையில் கட்டடம் இடிந்து காவலர் மரணமடைந்த வழக்கு கட்டடத்தின் உரிமையாளர் முகமது இத்ரீஸ், மேலாளர் அப்துல் ரசாக், கடை உரிமையாளர் நாகசங்கர், சுப்பிரமணி உள்ளிட்ட 4 பேரை  விளக்குத்தூண் போலீசார் கைது செய்துள்ளனர்.


 



  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.


 



  • உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பக்தர்களுக்கு செய்து தர கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.


 



  • முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் உறவினர் என்பதற்காக தன்னையும் ,தனது மகன்கள் மற்றும் ஓட்டுனரையும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என ராஜேந்திர பாலாஜியின் சகோதரி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 



  • தென்காசி, காசிதர்மம் பகுதியில் திருவாடுதுறை ஆதினத்துக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.


 



  • திண்டுக்கல் : பாச்ச‌லூர் ம‌லைக்கிராம‌த்தில்  சிறுமி உடலில் தீ காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழ‌ந்த‌ விவகாரம். வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு. இவ்வழக்கை திண்டுக்கல் காவல்துறை  தனிப்படை அமைத்து விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.


 



  • நெல்லை சாப்டர் பள்ளியில் கழிப்பறை கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில் விபத்து நடந்த இடத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு சென்று ஆறுதல் கூறுகின்றார்.


 



  • இலங்கை கடற்படை சிறைபிடித்த 68 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று நான்காவது நாளாக தொடர்ந்து மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டனர்.


 



  • தேனி மாவட்டத்தில் கடந்த தொடர் 4 நாட்களாக புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் இல்லை


 



  • கொடைக்கானல் பாச்சலூர் சிறுமி அரசு பள்ளியில் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் உயிரிழப்புக்கு நீதி கேட்டு கொடைக்கானலை சுற்றியுள்ள 5 ஊர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.


 



  • காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் நிறுவனம் மூலம் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தொகை வழங்கவில்லை என கண்டித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 



  • சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் அருகே விட விருக்யை சேர்ந்த  திரு பாலன் சந்திரா என்பவருக்கும் இடையே நடந்த மோதலில் திருவாளன் சந்திராவை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆயுள் தண்டனை வழங்கியும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண