மதுரை ஓபுளாபடித்துறை பகுதியில் ம.தி.மு.க., சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் மதிமுகபொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றார். மேடையில் வைகோ பேசுகையில்,

"தமிழ்நாடு தான் எங்கள் நாடு என ஓங்கி உரத்த குரலில் பேசியவர் பெரியார். இந்தியை திணிக்க வேண்டும் என நினைத்தால் நாடு துண்டாகும் என பெரியார் எச்சரித்தார். ஹிந்தியை திணித்தபோது அறிஞர் அண்ணா உயிரைக்கொடுத்தேனும் ஹிந்தி திணிப்பை எதிர்ப்போம் என உணர்ச்சியூட்டினார். அரசியலுக்கு வரும் இளைஞர்கள் தன்னலம் இன்றி பொதுநலத்தோடு பணியாற்றுவது தான் அரசியல். ம.தி.மு.க., தொண்டர்கள் எதனையும் எதிர்பார்க்காத லட்சியவாதிகள் ராஜாஜி பதவி விலகிய பின்னர் ஹிந்தியை மத்திய அரசு திரும்ப பெற்றது. மதுரை ரயில்வே சந்திப்பில் இருந்த ஹிந்தி மொழியை அழித்து தமிழில் எழுதி போராட்டம் நடத்தினர்.




ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஹிந்தியை கொண்டுவரமாட்டோம் என நேரு கூறினார். 1963ல் ஏப்-13ல் நாடாளுமன்றத்தில் ஹிந்தி தான் ஆட்சிமொழி என கூறி ஆட்சிமொழி மசோதா கொண்டுவந்தபோது அண்ணா தலைமையில் அரசியல் சட்டத்திற்கு தீ வைத்து கொளுத்தும் போராட்டத்திற்கு கலைஞர் என்னை வழி அனுப்பிவைத்தார். அப்போது முரசொலியில் போராட்டம் குறித்த அறிவிப்பில் எனது பெயர் இடம்பெறவில்லை என்பதால் மாறனிடம் கேட்டபோது எம்.பி பதவி போய்விடும் என கூறினார். ஆனாலும் எம்பி பதவிக்கு பயந்து நான் பின்வாங்கினால் திமுக தொண்டன் தலைகுனிவானது. என கூறிவிட்டு தடுத்தாலும் போராட்டத்தில் ஈடுபட்டேன். பிரபாகரனை பார்க்க செல்லும் போது தாயாரின் காலில் விழுந்தபோது எனது தாயாரின் கையில் இருந்த விளக்கு அணைந்தது. அப்போது அதுவும் நல்லதுக்கு தான் என்றேன்.



 

எனது பெயரை வைகோ என முதலில் எழுதியது கலைஞர் தான். தலைவர் அரசியல் சட்டத்தை எனக்கு கூடாது என கூறினாலும் ஆண்டவனே தடுத்தாலும் எறிப்பேன் என கூறி அரசியல் சட்டத்தை எறித்து போராட்டத்தில் ஈடுபட்டேன். அப்போது தாளை கொழுத்தியாக சொன்னார்கள் அப்போது நீதிமன்றத்தில் நான் அரசியல் சட்டத்தை எறித்தேன் என கூறினேன் , இதுபோன்று நாடாளுமன்றத்தில் இதனை கூறினேன். 1963ஆம் ஆண்டில் துப்பாக்கி குண்டுகளின் எண்ணிக்கை குறையலாம்,  ஆனால் எனது தம்பிமார்களின் உயிர்கள் குறையாது என அண்ணா கூறினார் அப்போது அரசியல் சட்டத்தை எறித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். இயக்கத்தில் தங்களை தாங்களே அழித்து தியாகம் செய்தவர்கள் தொண்டர்கள்.. ஹிந்திக்கு ஆட்சிமொழிக்கான தகுதி இல்லை எனவும், அது வேற்றுமையை உருவாக்கும் மொழி என கூறியவர் அறிஞர் அண்ணா. இப்போது வந்துள்ள ஆபத்து சனாதான சக்திகள் ஆபத்து சனாதன சக்தி தான் இந்துத்துவா அடிப்படை என கூறிவருகிறது. சனாதானம் வரும், இந்துத்துவா வரும், இந்திவரும்,  சமஸ்கிருதம் வரும் இதனை வர விடக்கூடாது. தமிழை போற்றுகிறாராம் மோடி என கூறுகின்றனர்.  மோடி போன்று மக்களை ஏமாற்றுபவர் யாரும் இல்லை.



பிற இடங்களில் அவர்களுக்கு ஏற்றாற் போல பேசுவார். தமிழை போற்றுகிறீர்கள் என்றால் இங்கு ஹிந்தியை திணிக்க கூடாது. இந்துத்துவா சக்திகளை சனாதான சக்திகளை தமிழகத்திற்கு நுழைய விடாமல் விரட்டியடிக்க வேண்டும். தேவபாசை என கூறி சமஸ்கிருதத்தை நுழைக்கிறார்கள். ஆளுநர் தமிழகம் என்கிறார் திடிரென தமிழ்நாடு என கூறுகிறார். தமிழ்நாடு வரலாற்றில் இவ்வளவு மோசமான கவர்னரை தமிழகம் கண்டதில்லை. இந்துத்துவா சக்திகளை தமிழகத்திற்கு நுழைய விடக்கூடாது பிடறி தெரிக்க ஓட வேண்டும். தமிழ்மொழிக்காக உயிரை நத்த போராளிகளின் மீது ஆணையாக கூறுகிறோம் இந்துத்துவாவையும், இந்தியையும் நுழைய விடமாட்டோம்" என்றார்.