முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “திமுக அரசின் மகளிர் உரிமை திட்டத்தில் கடும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதிகாரத்திற்கு வந்ததற்கு பிறகு தங்கள் அடையாளத்தை சுயரூபத்தை திமுக அரசு காட்டத் தொடங்கி இருக்கிறது. எல்லோருக்கும் மகளிர் உரிமைத்தொகை என்று சொன்ன அந்த வசனத்தை மாற்றி, தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை என்று மகளிரை வஞ்சிக்கின்ற காட்சிகளை நாம் பார்க்கிறோம். அது மட்டுமல்ல குளறுபடியின் மொத்த அடையாளமாக இந்த திட்டம் இன்றைக்கு இருக்கிறது. ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பதை போல, மக்களுடைய கவனத்திற்கு, அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். செல்லுகிற இடங்களில் எல்லாம் மக்கள் எங்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லை என்று தொடர்ந்து குரல் எழுப்புகிறார்கள்.
இதே அபய குரல் தமிழ்நாடு முழுவதும் கேட்பதாக செய்திகளில் நாம் அறிகிறோம். இப்படி இருக்கிற சூழ்நிலையிலே, அரசின் சார்பிலே ஒரு புள்ளி விவரம் வெளியிடப்பட்டது. அதில் ஒரு கோடி ரூ. 60 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 60 லட்சம் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களுக்கு வங்கியில் மூலமாக அவர்களுக்கு 1000ரூ கொடுக்கப்பட்டிருக்கிறது என்று புள்ளி விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 லட்சம் மனுக்களை தள்ளுபடி செய்தாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. நான் இதில் விண்ணப்பிக்கவில்லை ஆனால் எனக்கே தள்ளுபடி செய்ததாக 99421 34 419 நம்பரில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாத காரணத்தால் தங்களது விண்ணப்பத்தை ஏற்க இயலவில்லை. காரணம்: ”குடும்பத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து பிற ஓய்வூதியம் பெறுபவர் உள்ளனர்”.
இதுகுறித்து மேல்முறையீடு செய்ய விரும்பினால் அருகில் உள்ள இ-சேவை மையம் வழியாக கோட்டாட்சியருக்கு 30 நாட்களுக்குள[<<>>].org/ என்ற இணையதளத்தை அணுகலாம். முதல்வரின் முகவரி உதவி மைய எண்: 1100 -TNGOVT என்று அனுப்பப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பலருக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கும் குறுஞ்செய்தி செய்திகள் வருவதாகவும், சிலருக்கு பணம் கிடைத்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அரசே தகுதியை நிர்ணயித்து தள்ளுபடி செய்து, அதனை திரும்பியும் மேல் முறையீடு செய்யலாம் என்று சொல்வதை தமிழ்நாடு மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள். ஆகவே குளறுபடியின் மொத்த அடையாளமாக இருக்கிறது. இன்றைக்கு முதலமைச்சர் இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக சொல்கிறார். ஒரு கோடி பேருக்கு இலக்கை நிர்ணயம் செய்து விட்டு தற்போது ஆய்வு செய்கிறோம் என்பது கண்துடைப்பு நாடகமாகும். வரையறை நிர்ணயித்ததற்கு பிறகு நீங்கள் தான் சட்டசபையில் அறிவிக்கிறீர்கள். இன்றைக்கு ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிர்கள் எங்களுக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று கேட்கிறார்கள். அந்த காட்சிகள் எல்லாம் உங்கள் கவனத்திற்கு வருகிறதா? அதை எல்லாம் நீங்கள் நடவடிக்கை எடுப்பதற்கு தயாரா? மக்களுக்கு 520 வாக்குறியை நீங்கள் கொடுத்ததை நம்பித்தான் உங்களுக்கு அதிகாரத்தை வழங்கி இருக்கிறார். மக்களை ஏமாற்றுவதும், வஞ்சிப்பதும் மிகப் பெரிய அளவிலே இது ஒரு மோசடியாகத்தான் பார்க்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.