விருதுநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனது கணவரின் பணப் பலன்களை தனக்கும் தனது குழந்தைகளுக்கும் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் கணவர் 1992 முதல் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார் கடந்த 2015 ஜனவரி மாதம் பணியில் இருக்கும்போது உயிரிழந்துள்ளார். மனுதாரர் தனது பிள்ளைகளுமே வாரிசுதாரர்கள் எனக்கோரி பணப்பலன்களை வழங்குமாறு கூறியுள்ளார்.  மனுதாரரின் கணவர் ஏற்கனவே வேறு ஒருவரை திருமணம் செய்து முறையாக விவாகரத்து பெறாமல் இருவரும் பிரிந்துள்ளனர்.


மேலும் எனது முதல் மனைவி மற்றும்  தாயாரும் இறந்துவிட்ட நிலையில் மனுதாரர் அவரது பிள்ளைகளுமே வாரிசுகளாக இருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதோடு மனுதாரர் அவரது மகனும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு நீதிமன்றம் பின்வரும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மனுதாரர் தன்னையும் தனது பிள்ளைகளையும் தவிர வாரிசுதாரர்கள் வேறு யாரும் இல்லை என உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் அதன் அடிப்படையில் ஓட்டுநராக பணிபுரிந்து மனுதாரரின் கணவரது பணப்பலன்களை 4 நான்கு வாரங்களுக்குள் வழங்க தமிழக போக்குவரத்துக் கழகத்தின் செயலருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து  முடித்து வைத்தார்.




 


பிரச்சினைக்கு தீர்வுகாண மேல் அதிகாரிகள், மேல்முறையீடு, சீராய்வு, மறு சீராய்வு மனு என பல்வேறு வாய்ப்புகள் உள்ள நிலையில், அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல், நேரடியாக நீதிமன்றத்தை அனுகுவது  முறையாகாது-நீதிபதி







 

மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்  பிச்சையா. இவர் பணியிலிருந்த போது தனியார் பேருந்து மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக 1994-ல் பணி நீக்கம் செய்யப்பட்டார்.  இதை எதிர்த்து பிச்சையா தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் பிச்சையாவை மீண்டும் பணியில் சேர்க்க தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பணியில் சேர்க்கப்பட்டு 2011-ல் பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டார். தனக்கு பணப்பலன்கள், ஓய்வூதிய பலன்கள் வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இந்நிலையில் தனது பணப்பலன், ஓய்வூதியப் பலன் சரியாக கணக்கிடப்படவில்லை. ஆகவே, இது தொடர்பாக மதுரை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் 2019-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, பணபலன், ஓய்வூதிய பலன்களை சரியாக கணக்கிட்டு வட்டியுடன் வழங்க உத்தரவிடக்கோரி, பிச்சையா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், "மனுதாரர் பணி நீக்கம் செய்யப்பட்டு, தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மனுதாரரின் கோரிக்கை பணிப்பதிவேடு அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டும். இதுபோன்ற பிரச்சினைக்குரிய வழக்குகளில் நீதிமன்ற அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது.இதுபோன்ற பிரச்சினைக்கு தீர்வுகாண உரிய அதிகாரிகள், உரிய அமைப்புகள் உள்ள நிலையில். நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடுகின்றனர். மேல்முறையீடு, சீராய்வு, மறு சீராய்வு என பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நேரடியாக நீதிமன்றம் வருகின்றனர். இந்த வாய்ப்புகளை பயன்படுத்திய பிறகே நீதிமன்றத்துக்கு வர வேண்டும். எனவே, மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடலாம்"என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.