மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்களது எதிர்க்கட்சிகளை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.


குற்றவாளிகளை சேர்க்கும் அண்ணாமலை


 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் எல்லோருக்கும் எல்லாம் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகம் பகுதியில்  நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று பேசினார்.

 

அப்போது,” பா.ஜ.க., மாநிலத் தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் சட்ட ஒழுங்கை காப்பாற்றினாரோ இல்லையோ தமிழக பாரதிய ஜனதா தலைவரான பிறகு சமூக விரோத காரியங்களில் ஈடுபட்டு முத்திரை பெற்ற குற்றவாளிகள் அனைவரையும் பாரதிய ஜனதா கட்சியில் சேர்க்கின்ற வேலையை செய்து கொண்டிருக்கிறார் என்றார்.

 





மேலும் ஜனநாயகத்தின் போர்வையில் சர்வாதிகார ஆட்சியை மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது என்றும் ஈடி, வருமான வரித்துறை, போன்றவர்களை வைத்து நெருக்கடிகளை தந்து கொண்டிருக்கின்றனர் நெருக்கடி காலங்களை சந்தித்த இயக்கம் தான் திமுக என்றும் அழிப்போம், ஒழிப்போம் என்பதெல்லாம் அரசியல்வாதி, பல பொறுப்புகளை வகித்தவர் வாயில் இதெல்லாம் வரக்கூடாது என்றும் இது மிகப்பெரிய ஆபத்தை இந்தியா அழைத்து செல்வதற்கு  அர்த்தம் என்றார்.  ஹிட்லர் இன்னும் இறந்துவிடவில்லை மோடி வடிவில் நடமாடிக் கொண்டிருக்கிறார். ஹிட்லரை வீழ்த்தியது போல் இந்திய மக்கள் மோடிய வீழ்த்துவார்கள் என்று தெரிவித்தார்