மதுரை போதை பொருள் வழக்கில் விசாரணையிலும் தனக்கு யாரையும் தெரியாது என கூறிவருவதால் அடுத்தடுத்த நபர்களை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுவருகிறது.
மெத்த பெட்டமைன் போதைப்பொருள்
மதுரை செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் 180 கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்த பெட்டமைன் போதைப்பொருள் கடத்திய வழக்கில் சென்னையை சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையின்போது 6 கிலோ மெத்த பெட்டமைன் கொடுங்கையூரில் உள்ள வீட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனைடுத்து வீட்டிற்கு சென்று காவல்துறையினர் தேடியபோது கிடைக்காத நிலையில் கொடுங்கையூர் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் இருந்து மெத்தப்பெட்டமைன் போதைப்பொருளை கைப்பற்றினர்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை
இதனையடுத்து வீட்டில் இருந்த பிள்ளமல் பிரகாஷின் மனைவி மோனிஷா ஷீலா(35) விடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து மேற்படட விசாரணைக்காக சென்னையில் இருந்து நேற்றிரவு விமானம் மூலமாக மதுரைக்கு மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அழைத்துவந்து மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
டி.ஆர்.ஐ., அதிகாரிகள் தீவிர விசாரணை
ஏற்கனவே பிள்ளமன் பிரகாஷ்சிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருளை டாஸ்மாக். கடை ஒன்றில் அறிமுகமான இளைஞர் மூலமாக பெற்று அதனை தென் மாவட்டங்களுக்கு சென்று அந்த நபர் குறிப்பிடும் இடத்தில் வைத்துவிட்டு சென்றுவிடுவதாகவும், ஒரு டெலிவரிக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை பிள்ளமன் பிரகாஷ் மதுரை, தூத்துக்குடிக்கு ஏற்கனவே இதுபோன்று அடையாளம் தெரியாத நபர்களிடம் கொடுத்துச் சென்றுள்ளதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனிடையே பிரகாஷின் மனைவிக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து டி.ஆர்.ஐ., மதுரை யூனிட் அதிகாரிகள் விசாரணை நடத்திய பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். இது போன்று போதைப்பொருள் கடத்துவதற்கு பிள்ளமன் பிரகாஷை டெலிவரி நபராக பயன்படுத்தியவர்கள் யார் என்பது குறித்து தொடர் விசாரணையிலும் தனக்கு யாரையும் தெரியாது என கூறிவருவதால் அடுத்தடுத்த நபர்களை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுவருகிறது.
மேலும் ஒருவர் கைது?
இந்நிலையில் மெத்த பெட்டையன் வழக்கில் மேலும் ஒருவர் கைது என தகவல் கசிந்து வருகிறது. சென்னையில் இருந்து நேற்று அவருடைய மனைவி மதுரைக்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மதுரையில் மேலும் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டதாக தகவல் பரவிவருகிறது. இது குறித்த உண்மைநிலையை விரைவில் தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிதுவருகின்றனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரையில் கஞ்சா கடத்திய வழக்கில், பிரபல ரௌடி சபாரத்தினம் உள்ளிட்ட 5 பேருக்கு 14வருட சிறை தண்டனை !
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Roshini : அபிராமி அபிராமி ! என உருகிய கமல்... 'குணா' பட நாயகி ரோஷிணி இப்போ என்ன செய்கிறார்?