சுற்றுலா தலங்களின் வரிசையில் முதலில் இடம்பிடிப்பது கொடைக்கானல். அதற்கு காரணம் மலை சூழ்ந்த இடங்களும் இங்கு நிலவும் சிதோசன சூழலும்தான். வருடந்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை இருந்துகொண்டே இருக்கும். சீசன் நேரங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் நிலையில் இங்கு செல்வதற்கு மலைவழிச்சாலையே பிரதானமாக உள்ளது. இந்த நிலையில் பிரபல சுற்றுலா தலங்களான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மற்றும் ராமேஸ்வரம் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை துவங்கப்படும் என சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பள்ளம் பகுதியில் உள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைப்பதற்காக மூன்றுபேர் கொண்ட இந்திய வான்வெளி போக்குவரத்துத்துறை தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் வருகைபுரிந்து பெரும்பள்ளம் பகுதியில் உள்ள இடத்தில் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு தரைத்தளம் பக்குவமாக உள்ளதா,சாலைவசதியை மேம்படுத்த ஏதுவான வசதிகள் உள்ளதா, ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வான்வெளிப்பரப்பில் இடையூறுகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் : மழை நீர் செல்ல விடாமல் தடுத்த நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தொழில்நுட்ப உள்ள வல்லுனர்குழுவை சேர்ந்த சிவில் விமானப்போக்குவரத்து இணைப்பொதுமேலாளர் மார்கன் அளித்தபேட்டியில் 1.25 ஏக்கர் பரப்பளவில் இந்தப்பகுதி ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க ஏதுவாக இருப்பதாகவும், இந்த இடத்தில மேற்கொள்ள உள்ள கட்டுமானப்பணிகள்,
புதுச்சேரியில் கோயில் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் - ஆளுநர் தமிழிசையிடம் கோரிக்கை மனு
பின்னலாடைத் தொழிலை காப்பாற்றக்கோரி அமைச்சர் பியூஸ்கோயலுக்கு மதுரை எம்.பி. கடிதம் !
மேம்பாட்டு வசதிகள் குறித்து மத்திய,மாநில அரசுகளுக்கு விரிவான அறிக்கை இருபது நாட்களில் தாக்கல் செய்யப்படும் என்றும், இங்கு ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைத்தால் நடுத்தர மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் வகையில் அமையும் எனவும் தெரிவித்தார்.இந்நிகழ்வில் வருவாய் துறை,சுற்றுலா துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க