மதுரையில் பெய்த கனமழை - சாலைகளில் தேங்கிய மழைநீரில் ஊர்ந்துசென்ற வாகனங்கள்.

 


நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 


தேவையான இடங்களில் சாலை பணிகளை விரைந்து முடிக்கவும், மழை நீர் சாலைகளில் தேங்குவதை தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தெற்கு வங்கக்கடல் பகுதியில்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி நேற்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.

 





 

அதன்படி மதுரை மாநகருக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில்வே நிலையம், ஆரப்பாளையம், ஜெய்ஹிந்த்புரம், சிம்மக்கல், தல்லாகுளம், அண்ணாநகர், நரிமேடு, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், அனுப்பானடி, தெப்பக்குளம், கலைநகர், டி.ஆர்.ஓ., காலனி, ரேஸ்கோர்ஸ் காலனி, புதூர், பி.பி.குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்துவருகிறது . 



 

இதன் காரணமாக ஆங்காங்கே முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநகரின் சில தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியிருந்ததால் வாகனங்கள் ஊர்ந்தபடி மெதுவாக சென்றது. தேவையான இடங்களில் சாலை பணிகளை விரைந்து முடிக்கவும், மழை நீர் சாலைகளில் தேங்குவதை தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 



இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு