தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி சங்கிலி கரடு கல் குவாரியில், அரசு உரிமம் பெற்று கல் உடைக்கும் மகளிர் சங்கத்தினர் பல்வேறு முறைகேடுகளை செய்து வருவதாகவும், ஒருதலை பட்சமாக செயல்பட்டு தாங்கள் கல் உடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் கூறி, கல் உடைக்கும் தொழிலாளர்கள் மற்றும் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர், கல்குவாரி மலையின் உச்சியில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், குவாரியில் கல் உடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல் ஏற்றிக் கொண்டிருக்கும் டிப்பர் லாரி மற்றும் கல் உடைக்கும் பொக்லைன் இயந்திரங்களை முற்றுகையிட்டு, கற்களை உடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில், அரசு வருவாய் துறைக்கு சொந்தமான சங்கிலி கரடு கல்குவாரி அமைந்துள்ளது. பல வருடங்களுக்கு முன்பு தொடர்ந்து செயல்பட்டு வந்த இந்த கல்குவாரியில், ஏல உரிமை நிறைவடைந்ததால், கடந்த சில வருடங்களாக மூடப்பட்டு கிடந்தது. அதனைத் தொடர்ந்து, இங்கு கல் உடைக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கல்குவாரி செயல்பாட்டில் இல்லாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதாக கூறி, தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை வைத்தனர்.
தொழிலாளர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு, மகளிர் சுய உதவிக் குழுவினர், கல்லுடைக்கும் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கல் உடைக்கும் தொழிலாளர்கள் சங்கம் மூலம் கல்குவாரியை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக ஒப்பந்தம் அடிப்படையில் அனுமதிச்சீட்டினை வழங்கி கல் உடைத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று கல்குவாரிக்கு வந்த கல் உடைக்கும் தொழிலாளர்கள் கல் உடைப்பதற்கு ஏல அனுமதி சீட்டு வாங்கிய குழுவின் ஆலோசர்களாக இருக்கும் ஒரு சிலர் மட்டும் ஒருதலைபட்சமாக செயல்பட்டு பல வருடங்களாக கல் உடைத்து தொழில் செய்து வாழ்ந்து வந்த தொழிலாளர்களை கல்குவாரிக்குள் அனுமதிக்காமல், தாங்கள் மட்டும்தான் கல் உடைப்போம் ஏற்கனவே கல் குவாரி உரிமம் பெறுவதற்கு 3 கோடி ரூபாய் வரை கடன் தொகை பெற்று அரசு அனுமதி உரிமம் சீட்டு பெறுவதற்கு செலவு செய்தோம் மேலும் தாங்கள் உடைத்து தற்பொழுது விற்பனை செய்து வரும் கல்லின் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து அந்தக் கடன் தொகையை அடைப்பதற்கே சரியாக போய்விடுகின்றது என்றும்,
மேலும் தொழிலாளர்கள் யாரும் கல்குவாரிக்குள் வந்து கல் உடைக்க வேண்டாம், நாங்களே கற்களை உடைத்து விற்பனை செய்து, மாதந்தோறும் ஏதோ ஒரு தொகையை உங்களுக்கு தருகிறோம் எனக் கூறி, தொழிலாளர்களை கல்குவாரிக்குள் வரவிடாமல் தடுப்பதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதாகவும், மேலும், கல்குவாரி உரிமம் பெறும்போது, அனைத்து தொழிலாளர்களின் ஒத்துழைப்பு பெற்று அவர்களின் மூலமாகத்தான் சங்கத்தை உருவாக்கி மகளிர் குழு என பதிவு செய்யப்பட்டதாகவும், தற்பொழுது ஒரு சிலர் சங்க ஆலோசகர்கள் எனக்கூறி தங்களை ஏமாற்றிவிட்டு, நாங்கள் மட்டும் தான் கல் உடைப்போம், கற்கலை விற்பனை செய்வோம் என ஒரு சில தனி நபர்கள் துரோகம் செய்வதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கல்குவாரி உரிமம் பெற்றவர்களின் மீது புகார் கூறி, 200-க்கும் மேற்பட்ட கல் உடைக்கும் தொழிலாளர்கள் மற்றும் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் மலை உச்சியின் மீது அமர்ந்தும் கல்குவாரிக்குள் புகுந்து கல் உடைக்கும் இயந்திரமான பொக்லைன் இயந்திரம் மற்றும் லோடு ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளை முற்றுகையிட்டு எங்களுக்கும் கல் உடைக்கும் அனுமதி வரும் வரை யாரும் கண்டு பிடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.