மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது திண்டுக்கல் பத்திரிக்கையாளர்கள் கூட்ட அரங்கில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 100 நாட்கள் கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர், அவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், மீண்டும் அவர்களுக்கு பணி வழங்க வேண்டும். நீண்ட நாள் சிறையில் உள்ள முஸ்லிம் சிறை வாசிகளை திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் விடுதலை செய்வோம் என என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தனர் . அதை நிறைவெற்றவில்லை தற்போது வரை பலர் பரோலில் தான் வந்து இருக்கிறார்கள் அவர்களை முழுமையாக விடுதலை செய்ய வேண்டும். தமிழகத்தில் வரம்பு மீறிய அனுமதிக்கப்படாத கட்டிடங்கள், வீடுகளை அகற்ற நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவு களை அகற்றாமல், முஸ்லிம்கள் வீடுகளை மட்டும் சென்னையில் இடித்து உள்ளனர்,
தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது இதை ஆரம்பத்தில் இருந்து நாங்கள் எதிர்த்து வருகிறோம். தமிழக அரசு டாஸ்மார்க் கடையில் மூடுவோம் படிப்படியாக டாஸ்மார்க் எண்ணிக்கை குறைப்போம் என்று கூறி வந்த நிலையில் அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை ஆனால் விழா காலங்களில் குறிப்பிட்ட தொகைக்கு மதுபானம் அதிகமாக விற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஆட்சியாளர்கள் உள்ளனர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 500 மது கடைகளை குறைத்தார் அதற்கு பிறகு தற்போது திமுக ஆட்சியில் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கலாச்சார சீரழிவிற்கு போதை பொருட்கள் அதிகரித்துள்ளதே காரணம், சுய கட்டுப்பாடும் சுய ஒழுக்கமும் மக்களுக்கும் தேவைப்படுகிறது ஒட்டுமொத்தமாக குற்றம் சொல்லி விட முடியாது. இளைஞர்கள் இளம்பெண்கள் தங்களது ஆலோசனைகள் மற்றும் நட்பை பொதுவெளியில் நாகரிகத்தோடு வளர்த்துக் கொள்ள வேண்டும். தனிமையில் ஒரு இடத்திற்கு செல்லும் போது அங்கு கண்டிப்பாக குற்ற செயல் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
விஜய் அரசியல் கட்சி தொடங்கி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் விஜய்யின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் மக்களுக்கு சேவை செய்யலாம் அதில் மாற்றுக் கருத்து இல்லை. நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். அவருடைய நடவடிக்கைகள், கொள்கைகள் ,அவருடைய வருங்கால செயல்பாடுகள், அரசியல் நிலைபாடு என்ன ? அடுத்த கட்டத்திற்கு எப்படி செல்கிறார் என்பதை வைத்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
விஜய் கூட்டணிக்கு அழைத்தால் அது குறித்து எங்களது தலைவர்கள் சேர்ந்து முடிவெடுப்பார்கள். தற்போது நான்கு கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. வரும் காலங்களில் அரசியல் கட்சிகள் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்றார் போல் எங்களது கட்சி நிர்வாகிகளை கலந்து முடிவெடுப்போம் என தெரிவித்தார்.