திருச்சியைச் சேர்ந்த கார்த்திக் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,

"அரசால் செயல்படுத்தப்படும்  மருத்துவக்காப்பீடு  திட்டங்களில், தவறு செய்யும்  அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை நோயாளிகள்  உரிய  மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் முறையான, தரமான வழிகாட்டுதல்களை வகுத்து திறம்பட செயல்படுத்த சுகாதாரத்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். 

 

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகள் மகாதேவன்,  சத்யநாராயண பிரசாத் அமர்வு வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில், இன்று நீதிபதிகள் உத்தரவை வழங்கினர். அதில்," அரசு திட்டங்கள் தேவையானவர்களை சென்றடைந்து, உரிய பலன்களைப் பெறும் வகையில் வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டும். மருத்துவ திட்டங்கள் தொடர்பான விபரங்கள் குடிமக்களை எளிதாகச் சென்றடைந்து அவர்கள் பயனடைவதை உறுதிப்படுத்துவது முக்கியமானது. அது குறித்து மக்கள் அறிந்தால் மட்டுமே திட்டங்கள், அதற்கான தகுதிகள், சேவை முறையாக வழங்கப்படாத பட்சத்தில் புகார் அளிப்பது போன்றவை தொடர்பாக விவரங்களை அறிந்து கொள்ள இயலும். அதனை அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

 

அரசின்  மருத்துவ காப்பீடு  திட்டங்கள் குறித்து , வெளிப்படையாக, தெளிவாக பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில்  விளம்பர படுத்தி அனைத்து தரப்பு மக்களிடம் விழிப்புணர் வு   ஏற்படுத்த வேண்டும். மேலும் அரசின் மருத்துவ காப்பீடு  திட்டங்களில் தகுதியான நபர்கள்,  எளிய முறையில் இலகுவாக சேர்ந்து பயண்பெரும் வகையில் திட்டங்களை வடிவமைத்து,  செயல்படுத்த வேண்டும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

 





மற்றொரு வழக்கு



 

தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை










 

நிதி ஒதுக்கி, சங்க கால தமிழ் இலக்கியம் குறித்தும் நவீன கால தமிழ் இலக்கியம் குறித்தும் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், உலக தமிழ்சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, " தமிழ் மொழியை வளர்க்க  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  அதற்கு தேவையான நிதியை ஒதுக்கி, சங்க கால தமிழ் இலக்கியம் குறித்தும் நவீன கால தமிழ் இலக்கியம் குறித்தும் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.