ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதை 1999 ஆம் ஆண்டு மூப்பனார்தான் முதலில் முன்மொழிந்தார்; ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்திலும் பங்கு இருந்தால் தங்களது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மதுரையில் உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு கட்டி வருகிறது
மதுரை செல்லூர் பகுதியில் பாலாஜி மருத்துவமனை கட்டிடத்தை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஜி.கே.வாசன் பேசியதாவது: சென்னைக்கு பிறகு வளர்ந்து வரும் நகரமாக மதுரை, உருவெடுத்துள்ளது. அரசுத்துறை மட்டுமில்லாமல் தனியார் துறையிலும் சிறந்து விளங்கும் பகுதியாக மதுரை வளர்ச்சி பெற்று வருகிறது. மதுரையில் உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு கட்டி வருகிறது, பிரதமரே அடிக்கல் நாட்டியுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைதான் மதுரை பெரியதாக பேசப்படும்
உலக அளவில் இந்தியாவில் சுகாதாரத்துறை சிறந்து விளங்குகிறது. மாற்றான்தாய் மனப்பான்மை இல்லாமல் இந்திய சுகாதாரத்துற செயல்படுகிறது. லட்சக்கணக்கானோர் சிசிச்சை பெற மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் உலகப் புகழ் பெற்றது. வரும் காலத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திறந்த பின் மதுரையில் உலகப் புகழ் பெற்றதாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தான் மதுரை பெரியதாக பேசப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
2026ல் கூட்டணி ஆட்சி அமையாது அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெரும் கூட்டணி ஆட்சி அமையாது என OPS பேசியுள்ளாரே என்ற கேள்விக்கு
Ops அவர்களின் கருத்துக்கு எதிராக நான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனக்கு தெரிந்த கருத்தை நான் சொல்கிறேன். 1999ம் ஆண்டு ஆட்சியிலும் பங்கு., அதிகாரத்திலும் பங்கு என மூப்பனார் தலைமையில் கூட்டணி அமைந்தபோது அது எடுத்து வைக்கப்பட்டது. இன்றைக்கு தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு இருந்தால் தங்களது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது என்று நினைக்கிறார்கள் அது தவறு கிடையாது. நல்ல கூட்டணி, ஒத்த கருத்துடைய கூட்டணி, அதன் அடிப்படையிலே கூட்டணியின் பலம் மக்களின் நம்பிக்கை, வெற்றி வாய்ப்ப்பு, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதனை சார்ந்தது தான் கூட்டணி அரசின் வாதமாக இருக்கும் என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Power Showdown: மதுரை மாநகரில் நாளை (9.11.24) எங்கெல்லாம் கரண்ட் கட் தெரியுமா...?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - VCK: திருமாவிற்கு அடுத்து ஆதவ் அர்ஜூனாவா? ஆதங்கத்தில் விசிக மூத்த தலைவர்கள்!