Madurai HC: Grindr app மூலம் பேசி தனி இடத்துக்கு வர சொல்லி தாக்கிய நபருக்கு ஜாமீன் மறுப்பு

மனுதாரர்கள் Grindr app மூலமாக பல நபர்களிடம் பேசி குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர். அங்கு வந்தவர்களை தாக்கி அவர்களிடமிருந்து செல்போன், பணம் உள்ளிட்டவற்றைப் பறித்துள்ளனர்.

Continues below advertisement
ஓரினச்சேர்க்கை செயலி மூலம் பேசி தனி இடத்துக்கு வர சொல்லி தாக்கிய நபருக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
 
ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்
 
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், மகேந்திரன், அருண்குமார் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவில் ஓரினச்சேர்க்கை செயலி  (Grindr app) ஆண் நண்பர்களுடன் சாட் செய்து அவர்களை தனி இடத்திற்கு வரச் சொல்லி தாக்கி பணம் மொபைல் பறித்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டு  கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது.
 
 
ஹரி கிருஷ்ணன் மீது ஏற்கனவே 5 வழக்குகள் நிலவையில் உள்ளன
 
அரசு தரப்பில், "மனுதாரர்கள் Grindr app மூலமாக பல நபர்களிடம் பேசி குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர். அங்கு வந்தவர்களை தாக்கி அவர்களிடமிருந்து செல்போன், பணம் உள்ளிட்டவற்றைப் பறித்துள்ளனர். ஹரி கிருஷ்ணன் மீது ஏற்கனவே 5 வழக்குகள் நிலவையில் உள்ளன. மகேந்திரன் மீது  ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. ஆகவே அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது" என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, ஹரிகிருஷ்ணன் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. 
 

மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி

இதனையடுத்து ஹரிகிருஷ்ணனின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, மற்ற மனுதாரர்கள் மகேந்திரன் மற்றும் அருண்குமார் ஆகியோருக்கு சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் தினமும் காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
 
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola