தமிழகத்தில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்கள் விலை 70 விழுக்காடு வரை உயர்ந்து இருப்பதை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து திமுக அரசை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


AIADMK Protest: ”அதிமுகவினரும் சிறைக்கு சென்றனர்; ஆனால் விசாரணைக்கு யாரும் சிறுநீர் கழிக்கவில்லை” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!




NEET Ban: இவர்களுக்கெல்லாம் நீட் தேர்வு எழுத தடை; மருத்துவ கலந்தாய்வுக் குழு அதிரடி அறிவிப்பு


அதன்படி, திண்டுக்கல் நாகல் நகரில் இன்று ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை முதல்வராக்குவோம் எனப் பேசினார். இதனை அருகில் இருந்த கட்சிக்காரர்கள் அவரிடம் எடுத்துச் சொல்லவே பின்னர் மீண்டும் சுதாரித்துக் கொண்டு மீண்டும்  பேசுகையில், நான் மாற்றி சொல்லி விட்டேன் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவோம் என கூறினார். கூட்டத்தில் ஆண்கள் பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண