மதுரையில் ஷவர்மா கடைகளில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு - பழைய சிக்கன் கறிகள் பறிமுதல் !

சிக்கன் ஷவர்மா கடைகளில் பழைய சிக்கன் கறிகளை பயன்படுத்தக்கூடாது, சமைத்த உணவுப்பொருட்களை ப்ரீட்ஜரில் வைக்க கூடாது, உணவுப்பொருட்களில் வண்ணம் சேர்த்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Continues below advertisement

கடந்த சில  நாட்களாக ஷவர்மா உணவுதான் இந்தியா முழுவதும் வைரலாகியது. காரணம்,கேரளாவில் நடந்த ஒரு துயர சம்பவம். கேரளாவில் காசர்கோடு அருகே 16 வயதுச் சிறுமி தேவநந்தா, சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். அந்தக் கடையில் சாப்பிட்ட 49 பேர், வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடை உரிய அனுமதி இன்றி இயங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்ததும் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கடை மேலாளர், ஷவர்மாவைத் தயாரித்த இருவர் மற்றும் இணை உரிமையாளர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

Continues below advertisement


 சவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்து உண்மைதான் என்றாலும் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பதை மருத்துவத்துறையினர் ஆய்வு செய்தனர். உயிரிழந்த சிறுமிக்கு பிரேத பரிசோதனையும் நடந்தது.  பிரேத பரிசோதனை படி  சிறுமியின் உயிரிழப்பிற்கு ஷிகெல்லா வகை பாக்டீரியாதான் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசுத்தமான தண்ணீர் மற்றும் அசுத்தமான உணவில் இந்த பாக்டீரியா பரவும் என கூறப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா பரவியதால்தான் சிறுமி உயிரிழந்தார் என்றும், மேலும் 3 பேருக்கு இந்த பாக்டீரியா பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு 10 கிலோ பழைய சிக்கன் பறிமுதல் செய்து 5 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் அசைவ உணவு கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 52  அசைவ உணவக விற்பனை செய்யும் கடைகளில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயராம் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று ஆய்வு மேற்க் கொண்டனர். அதில்10கிலோ பழைய சிக்கன் கறிகள் பறிமுதல் செய்தனர். இதுத் தொடர்பாக 5 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும், சிக்கன் ஷவர்மா கடைகளில் பழைய சிக்கன் கறிகளை பயன்படுத்தக்கூடாது, சமைத்த உணவுப்பொருட்களை ப்ரீட்ஜரில் வைக்க கூடாது, உணவுப்பொருட்களில் வண்ணம் சேர்த்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 
 
 
 
 
 
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola