தரமற்ற பட்டுப்புழு..தீ வைத்து எரித்த விவாசாயிகள்.. 4 கோடி நஷ்டம்..! விவசாயிகள் வேதனை..

தரமற்ற பட்டுப்புழு முட்டையால் பட்டுப்புழு விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் புழுக்களை விழசாயிகள் தீயிட்டு எரிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

பழனியருகே தரமற்ற பட்டுப்புழுக்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பட்டுப்புழுக்களை தீவைத்து எரித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 4 கோடிக்கு  மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Continues below advertisement


விவசாயப் பயிர்களில் குறுகிய காலத்தில் நிறைவான லாபத்தைத் தரக்கூடிய பயிர்களுள் ஒன்று மல்பெரி மற்றும் அதைத் தொடர்ந்த பட்டுப்புழு வளர்ப்பு. எந்தத் தொழிலுக்கும் இல்லாத வகையில் பட்டுப்புழு வளர்ப்புக்கு அரசு, பல்வேறு மானியங்களை அள்ளிக் கொடுக்கிறது.

பட்டுப்புழுவின் உமிழ்நீர் சுரப்பியின் சுரக்கும் பட்டு, விவசாயிகளுக்கு அவர்களின் பண்ணை வருமானத்தை அதிகரிப்பதில் ஒரு சிறந்த மாற்றாக இருக்கும் என வேளாண் துறையினர் பாட்டுப்புழு வளர்ப்பில் பல்வேறு விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.


இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சுற்றிலும் ஏராளமான விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பழனி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட கிராமங்களில் பட்டுப்புழு வளர்ப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கோவை, உடுமலை திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மத்திய மாநில அரசுகளுக்கு சொந்தமான இளம்புழு வளர்ப்பு மையத்தில் இருந்து, விஞ்ஞானிகளால் முட்டையின் தரம் ஆய்வு செய்யப்பட்டு, புழுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு புழுக்களாக வழங்கப்படுகிறது. 100 எண்ணிக்கை கொண்ட புழுக்களை விவசாயிகளுக்கு  நான்காயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: Ooty Plans: மொத்தமாக மாறப்போகும் நீலகிரி - ஊட்டிக்கான 6 முத்தான திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் - என்னென்ன தெரியுமா?


இந்நிலையில் பழனி பகுதியில் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு இளம்புழு வளர்ப்பு மையத்தால் வழங்கப்பட்ட புழுக்கள் அனைத்தும் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

இதனால் பட்டுப் புழுக்களை விவசாயிகள் தீயிட்டு எரித்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மத்திய மாநில அரசுகளின் கீழ் செயல்படும் இளம்புழு வளர்ப்பு மையத்தில் இருந்து கொடுக்கப்பட்ட பட்டுப்புழுக்கள் தரமற்றதாக உள்ளது என்றும், முட்டையை ஆய்வு செய்து கொடுக்கவேண்டிய நிலையில் ஆய்வு செய்தார்களா என்பதே தெரியவில்லை என்றும், இளம்பலூர் வளர்ப்பில் ஈடுபட்ட 15நாட்களுக்குள் பட்டுப்புழுக்கள் அனைத்தும் கூடு கட்டவேண்டும்.

இதையும் படிங்க: ராமேஸ்வரம்-தாம்பரம் ரயில் எந்த ஸ்டேசனில் நிற்கும்: கொடியசைக்கும் பிரதமர் மோடி!

இதையும் படிங்க: BJP ADMK SEEMAN: ஒன்று கூடும் எதிர்காட்சிகள் - சீமான், நிர்மலா, செங்கோட்டையன் சந்திப்பு? ஈபிஎஸ் ஷாக்..! திமுக அவுட்டா?

ஆனால் தற்போது 13நாட்கள் ஆகியும் புழுக்கள் இலையை எடுத்துக்கொள்ளவும் இல்லை, கூடு கட்டவும் இல்லை. மேலும் புழுக்கள் அனைத்தும் உயிரிழந்து கீழே விழுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் தலா 1லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். பட்டுப்புழுக்களுக்கான  காப்பீடு கடந்த ஆண்டு 9வது மாதமே முடிந்துவிட்ட நிலையில் இதுவரை புதுப்பிக்கவில்லை என்றும், முறையாக காப்பீடு புதுப்பிக்கப்பட்டு இருந்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்றும், அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கின்றனர்.

பட்டுப்புழுக்கள் இறப்பு குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்த போது மீண்டும் தரமான முட்டைகள் இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். தரமற்ற பட்டுப்புழு முட்டையால் பட்டுப்புழு விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் புழுக்களை விழசாயிகள் தீயிட்டு எரிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Continues below advertisement
Sponsored Links by Taboola