தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன் குடியிருப்பு மலையடிவாரம், வண்ணாத்தி (விண்ணேற்றி) பாறை மலை உச்சியில் பிரசித்திபெற்ற மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது. தமிழக-கேரள எல்லையில் உள்ள இந்த கோவில் பகுதி கண்ணகி கோட்டம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அப்போது தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
தமிழக , கேரளா எல்லையான விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவிலில் மே 12ஆம் தேதி நடக்கும். இந்த நிலையில் , சித்ரா பௌர்ணமி விழா ஏற்பாடுகள் குறித்து இரு மாவட்ட அதாவது தமிழக, கேரள எல்லையை ஒட்டி இருக்கக்கூடிய தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தேக்கடியில் நடைபெற்றது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும் .
இதையும் படிங்க: ராமேஸ்வரம்-தாம்பரம் ரயில் எந்த ஸ்டேசனில் நிற்கும்: கொடியசைக்கும் பிரதமர் மோடி!
இதில் தமிழக, கேரளா பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள் .இக்கோவில் அமைந்துள்ள பகுதி யாருக்குச் சொந்தம் என்பதில் இரு மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. இருந்தபோதிலும் கோவிலுக்கு செல்லும் ஜீப் பாதை கேரள வனப்பகுதியில் இருப்பதால் விழா கொண்டாடுவதில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி அதில் எடுக்கப்படும் முடிவுகளின் படி இந்த விழாவானது கொண்டாடப்படும்.
இந்தாண்டு சித்ரா பெளர்ணமி திருவிழா வரும் மே 12ஆம் தேதி என்று நடக்கும். சித்ரா பௌர்ணமி விழா தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஸ்வரி தலைமையில் தேக்கடியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இரு மாநிலத்தை சேர்ந்த வனத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரம், போக்குவரத்து, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
விழா அன்று காலை 6:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை குமுளியில் இருந்து கோவிலுக்கு செல்ல பக்தர்களை அனுமதிப்பதும், மாலை 5 மணிக்கு கோவிலிலிருந்து திரும்புவது கடுமையான வெப்பம் நிலவுவதால் கூடுதலாக குடிநீர் வசதி தருவது, கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்குவது, குமுளியிலிருந்து கோவில் வரை செல்லும் 14 கிலோமீட்டர் தூர ஜிப்பாதையை சீரமைப்பது, லோயர் கேம்ப் பளியங்குடியில் இருந்து கோயில் வரை உள்ள 6.6 km தூர மலை பாதையை சீரமைத்து குடிநீர் வசதிகள் செய்து தருவது, உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன.
முடிவில் இரு மாநில எல்லையில் கோவில் திருவிழாவின் போது அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டுமென்ற தீர்மாணம் நிறைவேற்றியதுடன் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இரு மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக செய்து வருகிறது.