விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் டூ வேளாங்கண்ணி.. சிறப்பு கட்டண ரயில் விவரம்!

விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் - நாகப்பட்டினம் ரயில் நிலையங்களுக்கிடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

Continues below advertisement
விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் - நாகப்பட்டினம் ரயில் நிலையங்களுக்கிடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரையும் வேளாங்கண்ணி வரையும் நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06035) எர்ணாகுளத்தில் இருந்து ஆகஸ்ட் 13 முதல் நவம்பர் 12 வரை சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும். மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06036) வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 14 முதல் நவம்பர் 13 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.00 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.

 
இந்த ரயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

 
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 ரயில் மேலாளர் அறையுடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

Continues below advertisement

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola