கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி சில மாதங்களுக்கு முன்னர் செங்கோட்டையன் தலைமையில் நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், சிவி. சண்முகம் ஆகிய 6 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தியதாகவும் ஆனால், எடப்பாடி பழனிசாமி அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திலும் மனநிலையிலும் இல்லையென்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியே வந்த நிலையில், அப்படி யாரும் என்னை சந்திக்கவில்லை, எதுவும் வலியுறுத்தவில்லையென்று எடப்பாடி பழனிசாமி மறுத்த நிலையில், அது உண்மைதான் என்பதை செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பில் போட்டு உடைத்துள்ளார்.
அப்போது அவர் பேசுகையில் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் கட்சியின் தன்மை, நிலைபாடு குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். இதனை தொடர்ந்து அதிமுகவில் சசிகலா, தினகரன், ஒபிஎஸ் உள்ளிட்டோரை சேர்க்க வேண்டும் என்று கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன். இந்நிலையில், செங்கோட்டையனை கட்சியின் அமைப்பு செயலாளர், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த சூழலில் இன்று தேனி மாவட்டம் போடியில் உள்ள பன்னை வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் ஓபிஎஸ்.
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போடியில் செய்தியாளர் சந்திப்பின்போது கட்சியின் மூத்த நிர்வாகி 9 முறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் செங்கோட்டையன். தொண்டர்களின் கருத்தாகவும் அவருடன் கருத்தாகவும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என கருத்தை தெரிவித்ததற்கு, இதில் அவர் கருத்து தெரிவித்த ஒரே காரணத்தினால் எடப்பாடி பழனிச்சாமி அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதை எந்த வகையிலும் நியாயம் இல்லை என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் செங்கோட்டையன் கருத்துக்கு தான் முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என நாங்களும் அதைத்தான் நினைக்கிறேன் அந்த கருத்தை தான் செங்கோட்டையனும் தெரிவித்தார். மேலும் உலகத்திலே அதிமுகவில் யாரும் ஒன்றிணைக்க கூடாது என நினைப்பது தான் எடப்பாடி பழனிச்சாமி மட்டும்தான் நினைக்கிறார். அதிமுக 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகளில் ஆண்ட கட்சியாக இருந்து வந்த நிலையில், தற்போது தொடர் தோல்வியை கண்டு வருகின்றனர். அம்மா அவர்கள் கட்டிக் காத்த இயக்கத்தை தற்போது அழிவு பாதைக்கு சென்று வருவதாலும் அனைவரையும் ஒன்றிணைத்து மீண்டும் அம்மா ஆட்சியை உருவாக்குவதில் ஏன் அனைவரும் ஒன்றிணைய கூடாது என இதில் யாருக்கு என்ன நஷ்டம் என தெரிவித்தார். இதற்கு கட்சித் தொண்டர்களும் மக்களும் உரிய பாடம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.