அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரும் 27-ஆம் தேதி சந்திக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக அதிமுக-பாஜக இடையே குழப்பம் நீடித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு அவர் அமித்ஷாவை சந்திப்பது இது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இபிஎஸ்-அமித்ஷா சந்திப்பு
சமீப காலமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இபிஎஸ்க்கும் இடையே சிறு மோதல் போக்கு நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் பாஜகவிடம் தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்குமாறு கேட்டதாக தகவல் வெளியான நிலையில், அதிமுக தனித்து போட்டியிடுவதாக கூறி வேட்பாளரையும் அறிவித்தது. இதனால் அதிமுக பாஜக கூட்டணி குறித்த குழப்பம் நீடித்து வருகிறது. எனவே இவர்கள் கூட்டணியில் நிலவும் பிரச்சனைகளை எவ்வாறு கலையலாம் என்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று கூறப்படுகிறது.
பாஜகவை எதிர்த்து அதிமுக போட்டி
பா.ஜ.க. வேட்பாளருக்கு போட்டியாக அ.தி.மு.க. வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி இறக்கியிருப்பது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வேட்பாளரை களமிறக்கியுள்ளது. அந்த ஒரு வேட்பாளரும் தங்களது கூட்டணி கட்சி வேட்பாளருக்கு எதிராகவே களமிறக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க. சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் களமிறங்கியுள்ள அன்பரசன் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என சூளுரைத்துள்ளார். அ.தி.மு.க. தலைவர்கள் பா.ஜ.க.வுடன்தான் கூட்டணியில் இருக்கிறோம் என்று கூறினாலும், அ.தி.மு.க. முக்கிய தலைவர்கள் சிலர் இந்த கூட்டணியை விரும்பவில்லை என்ற தகவல்கள் வலம் வருகின்றன. இதனால், பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி முறிந்துவிடுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேசமயம் கர்நாடகாவில் மட்டும் பா.ஜ.க.வை எதிர்த்துவிட்டு தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுடனான கூட்டணி தொடருமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
அண்ணாமலை -இபிஎஸ் இடையே பனிப்போர்
அண்ணமைக்காலமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கிடையே பனிப்போர் நீடித்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு கட்சி கூட்டத்தில் பேசிய அண்ணாமலை வரும் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்தார். ஆனால் அவரின் கட்சியிலேயே சில நிர்வாகிகள் இதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என தெரிவித்திருந்தனர். இதனையடுத்து மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அதிமுக -பாஜக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ், தான் ஒரு முதிர்ந்த அரசியல் தலைவர் என்றும், ஒரு முதிர்ந்த தலைவரை பற்றி தன்னிடம் கேள்வி கேட்குமாரும் கூறி பதில் கூற மறுத்து விட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.
Car loan Information:
Calculate Car Loan EMI