மதுரை வந்த பாரத் ரயிலுக்கு மதுரையில் மேளதாளம் , கரகாட்டத்துடன் உற்சாக வரவேற்பு. அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கேக் ஊட்டிவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்த ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் - மார்க்சிஸ்ட் எம்.பி  சு.வெங்கடேசனுக்கு கேக் ஊட்டிய பா.ஜ.க., மாநில பொதுச்செயலாளர்.


தமிழகத்தை புறக்கணிக்கிறார்கள். தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை நம்ப வேண்டாம். பிரதமர் தமிழகத்தின் மீது அன்பு கொண்டுள்ளார் என்பதை நம்ப வேண்டும் - தமிழிசை சௌந்தராஜன் பேட்டி அளித்துள்ளார்.


வந்தே பாரத் ரயில்:


பிரதமர் நரேந்திர மோடி நெல்லையில் இருந்து சென்னை வரை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை இன்று காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். இன்று மதியம் சென்னை செல்வதற்காக நெல்லையில் துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, மத்திய இணை அமைச்சர் பயணித்தனர்.  






இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் மதுரை ரயில் நிலையம் வந்தடைந்தது. இதனை அடுத்து பாஜக சார்பில் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை  மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து கொடியசைத்து வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்தனர்.


மதுரை தொடர்பான மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sanatan Dharma Row: சனாதன தர்ம விவகாரம்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..




அமைச்சருக்கு கேக் ஊட்டிய ஆளுநர்:


இந்த நிகழ்ச்சியில் பிரத்யோகமாக வந்தே பாரத் ரயில் போன்று கேக் வெட்டப்பட்டது. தொடர்ந்து ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கேக் ஊட்டி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மதுரையில் தமிழிசை செளந்திர ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்." இரண்டு ரயில்கள் சென்னையில் இருந்தும் ஒரு ரயில் தென்பகுதிக்கு விடப்பட்டுள்ளது. தமிழகத்தை புறக்கணிக்கிறார்கள். தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை நம்ப வேண்டாம். பிரதமருக்கு தமிழகத்தின் மீது அன்பு கொண்டுள்ளார் என்பதை நம்ப வேண்டும்.




வந்தே பாரத் ரயிலில் பயணம் மேற்கொண்ட அனுபவம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகள் ஆர்வமுடன் தங்களது பயணக் குறிப்புகளை என்னிடம் உற்சாகமாக பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சாதாரண குடிமகளாக தமிழகத்தின் மகளாக வந்தே பாரத் ரயிலில் மக்களோடு மக்களாக வந்தேன். வந்தே பாரத் ரயிலில் பயணித்த மக்களின் மகிழ்ச்சியை பாரத பிரதமரிடம் சமர்ப்வந்பிக்க உள்ளேன்" என்று தெரிவித்தார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ‘பாஜகவுக்கும் எங்களுக்கும் பிரச்னையா..?’...யார் சொன்னது..? - செல்லூர் ராஜூ அந்தர் பல்டி