அங்கித் திவாரி வழக்கில் இருந்து நீதிபதி விவேக் குமார் சிங் விலகுவதாக அறிவிப்பு.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை துணை இயக்குநர் அங்கித்திவாரி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல். திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபு மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க தனக்கு 3 கோடி லஞ்சம் வேண்டும் என மதுரை அமலாக்க துறையில் பணிபுரியும் துணை இயக்குநர் அங்கித் திவாரி மருத்துவர் சுரேஷ் பாபுவை அணுகி உள்ளார். 3 கோடிக்கு ஒத்துக் கொள்ளாத நிலையில் ரூ 51 லட்சம் கண்டிப்பான முறையில் தர வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த நவம்பரில் 20 லட்சம் கொடுத்துள்ளார். தொடர்ந்து வாட்ஸ் ஆப் மூலமாக அங்கித் திவாரி மீதியுள்ள 31 லட்சத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து டாக்டர் சுரேஷ் பாபு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்சில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் ரசாயன கலவைகள் தடவிய 500 ரூபாய் நோட்டு கட்டுகளை பேக்கில் வைத்து சுரேஷ் பாபு கொடுத்தார் அப்பொழுது தப்பிக்க முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு துறை காரில் விரட்டி பிடித்து கைது செய்தது திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
மனு தாக்கல்
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி திண்டுக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கீத் திவாரி மனு தாக்கல் செய்திருந்தார் ஜாமீன் வழங்க மறுத்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்து. இந்நிலையில் இரண்டாவது முறையாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அங்கு திவாரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவில் எனது கைது என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே கைது செய்யப்பட்டு 70 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளேன். இதுவரை வழக்கில் குற்ற பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. சிறையில் உள்ளதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் அத்தனை நிபந்தனைகளையும் முறையாக பின்பற்றுவோம் எனக்கூறி மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கில் இருந்து விலகல்
இந்த மனு இன்று நீதிபதி விவேக்குமார் சிங் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார், அங்கித் திவாரி ஜாமீன் கோரி ஒரே நேரத்தில் உச்சநீதிமன்றத்திலும் இங்கேயும் மனு தாக்கல் செய்துள்ளார். எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனு உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் சட்டத்திற்குட்பட்டு பரிசீலனை செய்யலாம் என தெரிவித்தது. அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு நீர்த்து போய்விடும் என வாதிட்டார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், ஜாமீனுக்கான நிபந்தனை குறித்தும் வாதிட்டார். அப்போது கோபமடைந்த நீதிபதி,அங்கித் திவாரி ஜாமீன் கோரிய மனுவை தான் விசாரிக்க விரும்பவில்லை. இந்த வழக்கில் இருந்து தான் விலகி கொள்வதாகவும் தெரிவித்தார்.