அதிமுகவில் உள்ள ஒன்னறை கோடி தொண்டர்கள் பழனிசாமியை விரைவில் தூக்கி ஏறிவார்கள் என தேனியில் நடைபெற்ற தொண்டர்கள் உரிமை மீட்பு கூட்டத்தில் ஓ.பி.எஸ் பேசினார்.


முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டு கட்சி பெயர் மற்றும் கொடி சின்னங்களை பயன்படுத்தக் கூடாது என்று தீர்ப்பு வந்ததற்கு பின்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற தலைப்பில் மாவட்டம் வாரியாக தொண்டர்களை சந்தித்து கூட்டங்களை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக  அவரது சொந்த மாவட்டமான தேனியில் தொண்டர்கள் உரிமை மீட்பு கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர் வெள்ள மண்டி நடராஜன், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஒ.பி.ரவீந்திரநாத் மற்றும் தேனி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 2000க்கும் மேற்பட்டோர் இந்த உரிமை மீட்பு கூட்டத்தில் பங்கேற்றனர்.மேலும் கூட்டத்தில் தொண்டர்களிடையே ஓபிஎஸ் பேசுகையில், "தினம் தினம் எத்தனை தீர்ப்பு வந்தாலும் ஆதரவு தரும் தொண்டர்களுக்கு நன்றி.



அதிமுக தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். எம் ஜி ஆர் , அம்மா மக்களுக்காக பணியாற்றி தொலை நோக்கு திட்டங்களை வழங்கினார்கள். அதிமுகவில் 12 ஆண்டுகள் நான் கட்சியில் பொருளாளராக இருந்த நிலையில பொதுக்குழுவில் அறிக்கை வாசிக்க விடவில்லை. எடப்பாடி நடத்திய பொதுக் குழு கூட்டம் சர்வாதிகாரத்தின் உச்சத்தில் நடந்தது. பொது செயலாலருக்கான உரிமை தற்போது பரி போயிருக்கிறது. சாதாரண தொண்டன் கூட பொதுச் செயலாளராக வரலாம் என்ற சட்டத்தை அழித்தார்கள் கல் நெஞ்சக்காரர்கள். நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா என்பதை ரத்து செய்து எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் என்றார்கள். எடப்பாடி தலைமையில் உள்ளாட்சி, இடைத்தோதல் உள்ளிட்ட எட்டு தேர்தலில் தோல்வியுற்றது. கொங்கு மண்டலத்தில் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைய காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. தொண்டர்கள உங்களை விரும்பவில்லை என்று தானே அர்த்தம். அம்மாவும், சின்னம்மாவும், எனக்கு முதல்வர் பதவி தந்தார்கள். நான் திரும்ப கொடுத்தேன்.


சின்னம்மா காலில் தவழ்ந்து தவழ்ந்து முதல்வரானார் பழனிசாமி. அம்மா பெற்றுத்தந்த ஆட்சியில் தானே நீங்கள் தவழ்ந்து தவழ்ந்து  முதல்வரானீர்கள். அதற்கு புதுக்கதை சொல்கிறார். நம் உடம்பில  ஒடும் ரத்தம் அதிமுக ரத்தம்.  நமது இலக்கு அதிமுகவை கபட, வேடதாரிகளிடம் இருந்து மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைப்பது,தொண்டர்கள் தான் இயக்கத்தின் நாடி நரம்பாக இருந்த நிலையை,  கட்டமைப்பை உருவாக்கி எந்த தேர்தலிலும் நம்மை வெல்ல முடியாது என்பதை உருவாக்க வேண்டும்.பழனிசாமி அவர்களே பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால அதிமுகவின் ஒவ்வொரு தொண்டர்களும் தூக்கி எறிவார்கள்.




அம்மாவின் எண்ணம், எம்ஜிஆர் எண்ணம், தொண்டர்கள் மேடையின் முன்வரிசையில் அமர வேண்டும். ஒரு தொண்டன் முதல்வராகலாம். வேறு எந்த கட்சியிலும் இல்லை.தாத்தா, அப்பா, பேரன் என்ற திமுகவின் நிலை அதிமுகவில் இல்லை.முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி தந்தார். கொடநாடு கொலை கொள்ளை விசாரித்து மூன்று மாதங்களில் குற்றவாளியை கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு தெரிவிப்பேன் என்றார். மூன்று ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை. எங்களுக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும். கோட நாட்டில் கொலை, கொள்ளை நடத்தியது யார். ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.தமிழகத்தில் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் ஒன்றாக இருக்கிறது.


இது ஜனநாயக துரோகம். சின்னம்மாவை இணைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்கிறார் இபிஎஸ். தவழ்ந்து தவழ்ந்து முதல்வர் பதவி வாங்கிய இபிஎஸ் துரோகம் செய்தார். அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவரும் அதிமுக வர வேண்டும் என்கிறார்கள். மீண்டும் அம்மா ஆட்சி மலர வேண்டும்” என்று தொண்டர்கள் உரிமை மீட்பு கூட்டத்தில் ஓபிஎஸ் பேசினார்.