மேயர் அங்கியை அணிந்து கொண்டு சுயமரியாதை காற்றில் பறக்கவிட்டு உதயநிதியின் காலில் விழுவதுதான் திராவிட மாடலா என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்தார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது, “திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக அதிமுக உள்ளது உலகில் முதன் முதலில் ஏழைகளுக்காக 17.10.1972-ஆம் ஆண்டு இந்திய இயக்கத்தை வழங்கினார் புரட்சித்தலைவர் இருக்கும் வரை திமுக கோட்டை பக்கம் எட்டிப்பார்க்க முடியவில்லை அதனை தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அதிமுகவை மூன்றாம் பெரிய இயக்கமாக உருவாக்கினார்கள். எங்களை வழிநடத்திச் செல்லும் அம்மா அவர்களின் காலில் விழுவதை கேலி செய்தும், நையாண்டி செய்துகொண்டும் இருந்தனர்.
ஆனால் இன்றைக்கு தி.மு.கவின் தன்மானம் சுயமரியாதை எங்கே போனது தஞ்சையில் உதயநிதி வந்தபோது அங்கு தஞ்சை மேயர் அங்கியுடன் சென்று உதயநிதியின் காலில் விழுந்து உள்ளார். உதயநிதி கண்டிக்காமல் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டுள்ளார் காலில் விழுவதை சுயமரியாதை என்று விமர்சித்த தி.மு.க., இதற்கு தி.மு.க என்ன விளக்கம் சொல்லப் போகிறது.
மேயர் அங்கியுடன் பொதுவெளியில் காலில் விழும் உரிமையை யார் கொடுத்தது மூத்தோர் காலில் இளையோர் விழுவது தமிழர்கள் பண்பாடு கலாச்சாரம் ஆனால் இன்றைக்கு வயது இளையோரிடம் முதியோர் காலில் விழுந்து சுயமரியாதையை காற்றில் பறக்கப்பட்டுள்ளது. இந்த புது கலாச்சாரம்தான் திராவிடத்தின் மாடலா? திராவிட மாடலில் சுயமரியாதையை இப்படித்தான் அம்பலப்படுத்துகிறதா? நிச்சயம் இதை மக்களே கேட்பார்கள் என்று கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்