தமிழ்நாட்டில் போட்டி என்பது திமுகவிற்கும் NDA வுக்கும் தான், NDA வில் பல கட்சிகள் சேர்ந்து உள்ளது, அதில் ஒரு கட்சி அண்ணா திமுக. மக்கள் மனதில் முதலமைச்சர் யார் என்று நிர்ணயித்து விட்டார்கள். அந்த அடிப்படையில் திமுக தான் வெற்றி பெறும். திமுகவிற்கு மொத்த வாக்குகளில் 50 சதவீதம் மத்த மூன்று கட்சிகளுக்கும் சேர்த்து 50 சதவீதம் தான் - என சின்னாளப்பட்டியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி பேட்டி.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் 200 பெண்களுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊரகம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிதம்பரம் மற்றும் மாணிக்கம் தாகூர் இருவரும் திமுக இதுவரை கூட்டணிக்கு அழைக்கவில்லை என்று தொடர்ந்து குற்றம் சாற்றி வருகின்றனர் என்ற கேள்விக்கு, முதலமைச்சரும் - ராகுலும் பேசி முடிப்பார்கள் என சொல்லி இருக்கின்றனர் என்று நான் சொல்லி உள்ளேன். அவர்கள் தேசிய கட்சி நாங்கள் மாநில கட்சி இரண்டு தலைமையும் பேசிக்கொண்டு உள்ளனர். ஏற்கனவே கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர், விரைவில் அதைப்பற்றி பேசுவோம்.
பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இணைந்தால் விடுதலை சிறுத்தைகள் வெளியேறும் என தொல். திருமாவளவன் கூறி வருகிறார் என்ற கேள்விக்கு, இதுவரைக்கும் பாமக அப்படி ஒரு முயற்சி வரவில்லை, எங்களுடன் கூட்டணிக்கு வருவதாக அவர் வரவும் இல்லை எங்களது தலைவர் பேசவும் இல்லை. அவர்கள் வந்தால் தான் அந்த பேச்சுக்கு இடம் எந்த பேச்சு வார்த்தைகளும் நடக்காமல் தான் உள்ளது. இது அவருடைய தனிப்பட்ட கருத்து ஆகும். எங்களைப் பொருத்தவரை கூட்டணி மிக உறுதியாக உள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக இந்த கூட்டணி அனைத்து தேர்தலிலும் சந்தித்து உறுதியாக இருந்து தேர்தலை சந்திக்கிறது. இது ஏதோ சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல இது அரசியல் கூட்டணி இது உறுதியான கூட்டணி கண்டிப்பாக இந்த கூட்டணி தான் இருக்கும். புதிதாக கூட்டணி அமைந்தால் தலைவர் அதைப்பற்றி முடிவெடுப்பார்.
வருகின்ற 2026 தேர்தலில் அதிமுகவும் திமுக தான் பிரதான எதிரி என்று கூறுகின்றனர், அதேபோல் தமிழக வெற்றி கழகத்தினரும் திமுக தான் பிரதான எதிரி என்று கூறி வருகின்றனர் என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டில் போட்டி என்பது திமுகவிற்கும் NDA. வுக்கும் தான் NDA வில் பல கட்சிகள் சேர்ந்து உள்ளது அதில் ஒரு கட்சி அண்ணா திமுக. இந்தக் கூட்டணியில் திமுக தான் தலைமை தாங்கி வருகிறது அந்தக் கூட்டணியில் NDA தலைமை தாங்கி இருக்கிறது. இது வெட்ட வெளிச்சமாக தெரியும். NDA கூட்டணி என்று சொல்கிறார்கள். NDA கூட்டணிக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை, திமுக தலைவர் இருக்கின்ற இந்த கட்சிதான் இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும். எங்களது லட்சியம் 200 தொகுதி என்பதில் உறுதியாக உள்ளோம்.
234 தொகுதிகளிலும் திமுக வந்தாலும் வரும் இப்போது உள்ள அரசியல் சூழல் அப்படித்தான் உள்ளது.என் டி ஏ கூட்டணியில் தெரியாமல் சேர்ந்து விட்டார்கள் இப்பொழுது ஆளாளுக்கு ஒன்று உளறி கொண்டு வருகின்றனர். பாராளுமன்றத் தேர்தலில் என்ன சொன்னார் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இருந்ததால் தான் நாங்கள் தோற்றோம் என்று கூறினார் எதிர்க்கட்சித் தலைவர். பாராளுமன்றத் தேர்தலில் தனித்து நிற்போம் என்று கூறினார். ஆனால் ஒரு தொகுதியில் கூட வரவில்லை பிஜேபி உடன் சேர்ந்தால் நாங்கள் வெற்றி பெற முடியாது என்று சொன்ன எடப்பாடி பழனிச்சாமி இப்பொழுது என்ன செய்யப் போகிறார்? சேர்ந்தது எந்த அடிப்படையில் அவர் சேர்ந்தார்.
நான்கு ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த அவர் மக்களுக்காக குரல் எழுப்பவில்லை, தற்பொழுது வெட்டி விளம்பரங்களை செய்து வருகின்றார். இப்பொழுது தட்டி வைத்து போஸ்டர் ஒட்டி விளம்பரம் தேடி வருகிறார். மக்களை நேரடியாக சந்திக்கவில்லை, மக்களை சந்திக்க தைரியம் இல்லை, மக்களுக்காக போராட்டம் நடத்தியது இல்லை, கோரிக்கைகளும் கேட்டது இல்லை, மக்களுக்காக எதுவும் செய்யவில்லை எப்படி மக்கள் நம்புவார்கள். மக்கள் மனதில் முதலமைச்சர் யார் என்று நிர்ணயித்து விட்டார்கள் அந்த அடிப்படையில் திமுக தான் வெற்றி பெறும். திமுகவிற்கு மொத்த வாக்குகளில் 50 சதவீதம், மத்த மூன்று கட்சிகளுக்கும் சேர்த்து 50 சதவீதம் தான் என்று பேட்டியளித்தார்.