Madurai: சிவப்பு நிறத்தை பார்த்தால் யாருக்கு பீதி வரும்.. இயக்குநர் சமுத்திரகனி விளக்கம்

வர்க்கத்தை ஒழிப்பதும், சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளை சமமாக்குவதும் கம்யூனிஸ்ட் தத்துவம் தான்.

Continues below advertisement

பொதுவுடமைவாதி காற்று மழை போல இருக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் என்பது கம்யூனிசம் - அப்படி என்றால் கடவுளும் கம்யூனிஸ்ட் தான் என்று இயக்குநர் சமுத்திரக்கனி பேசினார்.

Continues below advertisement

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24ஆவது மாநாடு நடைபெற்று வருகிறது. கடந்த 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. 3-வது நாள் நிகழ்வில் இயக்குநர் சமுத்திரக்கனி மேடையில் பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய மாநாட்டில் இயக்குநர் சமுத்திரகனி பேச்சு
 
”உலகத்தில் எங்கு சிவப்பு சட்டை அணிந்து வந்தாலும் ஒரு எளிய மனிதர் வருகிறார். அவரிடம் நாம் பேசலாம் என நினைக்கும் அளவிற்கு நம்பிக்கை பிறக்கும். சிறிய வயதில் இருந்து சிவப்பு என்றால் ஆசை, வெற்றிமாறனை பார்க்கும்போது எங்கோ ஒரு இடத்தில் சிவப்பு சிந்தனை வரும். ராஜூமுருகன், லெனின்பாரதி என எங்க துறையில் சிவப்பு சிந்தனையோடு வரும் திரைப்பட இயக்குநர்களை பார்க்கும்போது அவர்களுக்கு தனி முத்திரையெல்லாம் கிடையாது. ஆனால் மகிழ்ச்சியாக இருக்கும். வர்க்கத்தை ஒழிப்பதும், சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளை சமமாக்குவதும் கம்யூனிஸ்ட் தத்துவம் தான். பொதுவுடமைவாதி காற்று மழை போல இருக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் என்பது கம்யூனிசம் அப்படி என்றால் கடவுளும் கம்யூனிஸ்ட் தான்.
 
பெரிய மாற்றத்தை உருவாக்குவோம்
 
சிவப்பு நிறத்தை பார்த்தாலே ஒரு பீதி வரும், ஏமாற்றுப்பவனுக்கு, திருட்டுதனம் பண்ணுபவனுக்கு  பயம் வரும்.  திரைப்படத்தில் ஓங்கி பேச வேண்டும் என்ற காட்சி வந்தாலே  சிவப்பு சட்டை தான் அணிவேன். எளிமையான முகங்கள் நம்பிக்கையான முகங்கள் தான் இந்த சமூகத்தை கட்டிப்பிடித்து சுத்திக்கொண்டு இருக்கிறது. கம்யூனிஸ்ட்கள். எனக்கு வலது இடது என்பதில் உடன்பாடில்லை தீயில் நல்ல தீ கெட்ட தீ என்பது இல்லை,  இரண்டும் ஒன்றாக இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். ஒன்று சேருவோம் பெரிய மாற்றத்தை கொண்டுவருவோம்” என்றார்.
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola