திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் வாரம்தோறும் வியாழக்கிழமையன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர். இந்தநிலையில் இன்று   அதிகாலை  சந்தை கூடியது வழக்கத்தைக் காட்டிலும் விவசாயிகளும் வியாபாரிகளும் மிகவும் குறைவாக வந்திருந்தனர்.


Loksabha election 2024 : 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் என்ன? - வீடியோ




விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் கஷ்டம்:


சந்தை நிலவரம் குறித்து திண்டுக்கல் கறிக்கடை வியாபாரி மணி கூறிய போது நாங்கள் எப்போதுமே அய்யலூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வாங்க வருவோம். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வியாபாரிகள் பணம் கொண்டு வருவதற்கு சிரமமாக உள்ளது கொண்டு வந்தாலும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் கொண்டு வர முடியவில்லை. 49 ஆயிரம் ரூபாய் கொண்டு வந்தால் இரண்டு முதல் மூன்று ஆடுகள் மட்டுமே வாங்க முடியும் விக்கிற விலைவாசிக்கு, இதனால் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் கஷ்டமாக உள்ளது.




யாரு யாரு எவ்வளவோ பணம் கொண்டு செல்கிறார்கள். அதையெல்லாம் தேர்தல் பறக்கும் படையினருக்கு தெரியவில்லை வியாபாரத்திற்கு கொண்டு செல்லும் பணத்தை தான் பிடிக்கிறார்கள். குறிப்பிட்டு இந்த ஆட்டு வண்டியில் கொண்டு செல்லும் வியாபாரிகள்  பணத்தை தான் வந்து பிடிக்கிறார்கள். மற்றவர்கள் எப்படி பணம் கொண்டு போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியும். ஆனால் அதை கண்டுகொள்ள மாட்டார்கள் ஆனால் நாங்கள் கொண்டு செல்லும் பணத்தை குறிப்பிட்டு பிடிக்கிறார்கள்.


Rahul Gandhi Assets: சொந்தமாக வீடும் இல்ல காரும் இல்ல.. ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு என்ன? முழு லிஸ்ட் இதோ




இதனால் பயந்து கொண்டு பணம் கொண்டு வருவதில்லை இதனால் விவசாயிகளிடம் சந்தையில் வந்து ஆடுகள் வாங்க முடியவில்லை ஆடு வாங்கும் போது வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் கடன் சொல்லவும் முடியவில்லை கடன் சொன்னாலும் விவசாயிகள் தருவார்களா? வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் தேர்தல் அதிகாரிகள் சற்று அவர்களின் வாழ்வாதாரத்தை புரிந்து புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.