திண்டுக்கல்லுக்கு இன்று வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுமக்களின் ஆதரவோடு இருநூறு தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். வெற்றிக்கு முதன்மை பலமாக இருப்பது கூட்டணி பலம். திமுகவை எதிர்த்து நிற்கின்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி பலம் இல்லாமல் இருக்கின்றனர். திமுக கூட்டணி கொள்கை பிடிப்புள்ள கூட்டணி 23 கட்சிகளைக் கொண்ட பலமான கூட்டணி தமிழ் மக்களின் பேராதரவை பெற்ற கூட்டணி. 

Continues below advertisement

கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு திமுக செய்த பல்வேறு சாதனைகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்திருக்கிறது. அவர்களின் ஏகோபித்த ஆதரவு திமுக கூட்டணிக்கு உள்ளது.  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை எங்கள் கூட்டணிக்கு பலம் சேர்ப்பதாக இருக்கிறது. எங்களை எதிர்த்து நிற்பவர்கள் மட்டுமே பரப்ப முடிகிறது. அதனை பொருட்படுத்தாமல் மக்கள் எங்கள் கூட்டணியை வெற்றி பெற வைப்பார்கள். 

Continues below advertisement

மகாராஷ்டிரா முதலமைச்சர்  மதுரையில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது பாஜகவை வெற்றி பெற வைத்தால் தான் மதுரைக்கு மெட்ரோ ட்ரெயின் திட்டம் கிடைக்கும் என்று பேசியது குறித்த கேள்விக்கு, இதுதான் பாஜக என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோல் தேர்தல் களத்தில் உருட்டல், மிரட்டல், பிளாக் மெயில் போன்ற செயல்களை பாஜகவினர் கையாண்டு வருகின்றனர். வடமாநிலங்களில் சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிறார்களோ ஆதாயம் தேடுகிறார்களோ அதேபோல் இங்கேயும் கைவரிசை காட்ட பார்க்கிறார்கள். அவர்களின் எந்த சதி முயற்சியும் இங்கு வெற்றி பெறாது. தேர்தல் முடிவு அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டும்.

தேமுதிக கட்சியைப் பற்றியும் பிரேமலதாவை பற்றியும் அவதூறான கருத்துக்களை எடப்பாடி பழனிச்சாமி கூறியது குருத்த கேள்விக்கு, தேமுதிக-வை அதிமுக கூட்டணியில் இணைப்பதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அது வெற்றி பெறவில்லை. திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டார்கள் என்பதால் ஏமாற்றம் விரக்தியின் காரணமாக அவர்களை அப்படி பேச வைக்கிறது.  இவற்றை தமிழ்நாட்டு மக்கள் அமைதியாக கவனித்து வருகிறார்கள். 

விஜய் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பதற்கு தான் காரணம் என குற்றம் சாட்டி வருவது குறித்த கேள்விக்கு,   தற்பொழுது பரப்புரைக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டும்தான் உள்ளது. தமிழ்நாட்டு அதிகாரிகள் இருக்கலாம் ஆனால் தேர்தல் ஆணையம் தான் அவர்களை வழிநடத்துகிறது. விஜய் பரப்புரைக்கு காவல்துறை அனுமதி மறுக்கிறது என்பதற்கு திமுக காரணம் கிடையாது. வேண்டுமென்றே திமுகவிற்கு எதிராக இதை திருப்ப பார்க்கிறார்கள்.  மக்கள் அரசியல் அறியாதவர்கள் இல்லை மக்களை ஏமாற்ற முடியாது எனக்கூறினார்,