திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரில் கோழியை நாய் கடித்துக் கொன்றதால் ஏற்பட்ட  பிரச்சினையில் தாய் கண் முன்னே மகன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நத்தம் காமராஜர் நகரை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மகன் விஷ்ணு (வயது 26). டிப்ளமோ என்ஜினீயர். இவர், தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் முத்து (38). கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டில் ஒரு கோழி வளர்த்து வந்தார்.




இந்த நிலையில் சம்பவத்தன்று முத்துவின் வீட்டருகே அவர் வளர்த்து வரும் கோழி இரைதேடிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த விஷ்ணுவின் நாய் கோழியை கடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த முத்து, நேற்று காலை விஷ்ணுவிடம் கோழியை நாய் கடித்தது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டார்.


தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த முத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஷ்ணுவை சரமாரியாக குத்திவிட்டு சென்றுவிட்டார். இதில் படுகாயமடைந்த விஷ்ணு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.




அவரை அக்கம்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஷ்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை குத்திக்கொன்ற முத்துவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




ஒட்டன்சத்திரம் அருகே மூன்று பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து 2 பேர்  பலி ,இருவர் படுகாயம் அடைந்த சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..




திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா பகுதிக்குட்பட்ட மேட்டுபட்டி  பகுதியில் இன்று காலை  இரு சக்கர வாகனங்கள் இரண்டு ஸ்பெலண்டர் பைக்குகளும், ஒரு ஸ்கூட்டி வாகனமும் மூன்று பைக்குகளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பூசாரி கவுண்டன் வலசை சேர்ந்த பிரவின் 20 வயது ,இவருடைய சித்தி குமராத்தாள் 55 வயது இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.




 


மேலும், இருவரது உடலை மீட்ட போலீசார் பழனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இந்நிலையில் மேலும்  படுகாயமடைந்த வேலம்பட்டியை சேர்ந்த ஜெகன், சரவணம்பட்டியை சேர்ந்த செந்தில் இருவரையும் பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். இதுகுறித்து கள்ளிமந்தயம் காவல் கதுறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மூன்று பைக்குகள் நேருக்கு நேர் மோதி கொண்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண