தமிழர்களின் வாழ்வில் கலந்தது விவசாயம். அந்த விவசாயத்திற்கு நன்றி செலுத்தும் வகையில் வீடுகளில் ஒவ்வொரு நாளும் நிலம், நீர், காற்று, நெருப்பு உள்ளிட்ட ஐம்பூதங்களுக்கும் நன்றி செலுத்தி வழிபாடு செய்யப்படுவதும், அதே போன்று திருவிழாக்களில் இயற்கைக்கு நன்றி கூறி கொண்டாடப்படுவதும் நடந்து வருகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் அதாவது விலங்கினங்களுக்கும் அதிகளவில் முக்கியத்துவமும் தரப்படுவதும் உண்டு.


“மா மதுரை” விழா: காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! என்ன ஸ்பெஷல்?




குறிப்பாக வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளுக்கென தனி சிறப்பு உண்டு. அதிலும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படுவது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கப்படும் விதங்களும், காளைகளை பராமரிப்பதிலும் தனி கவனம் செலுத்துவார்கள்.


ஜல்லிக்கட்டு காளைகளை தங்கள் குடும்பத்தில் ஒரு ஜீவனாக பாவித்து வளர்க்கப்படுவதும், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க காளைகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் முதற்கொண்டு காளைகளை வளர்ப்பதில் காளையின் உரிமையாளர் ஒவ்வொருவரும் பார்த்து பார்த்து ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றனர். அதிலும் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கு தனி மவுசு உண்டு. கோவில் காளைகள் உட்பட.  அப்படிப்பட்ட காளைகளை வளர்ப்பதில் உயிருக்கு உயிராக இருக்கும் மக்கள் அது இறப்பிலும் சடங்குகள் செய்வதும் தனி கவனம் செலுத்துவர்.


ஆபரேஷன் போது பெண் வயிற்றினுள் மருத்துவ உபகரணம்: ரூ. 7.20 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு




அப்படி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி நகர்  மலையாளத்து கருப்பு, மந்தையம்மன் கோவில் காளை கோவில் அருகில் உள்ள கிணற்றில் விழுந்து இறந்து விட்டது. இதனை தொடர்ந்து இறந்த கோவில் காளை அங்குள்ள மந்தையில் வைக்கப்பட்டது. அங்கு இறந்த கோவில் காளைக்கு மாலைகள், சந்தனம், ஜவ்வாது, வேஷ்டி, துண்டுகள் போன்றவற்றை அணிவித்து கண்ணீர் மல்க அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர். அத்துடன் சுற்று வட்டார கிராம மக்களும் வந்து அந்த காளைக்கு மரியாதை செலுத்தினர்.


LIVE | Kerala Lottery Result Today (08.08.2024): இன்றைய கேரளா லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு தொகை ரூ. 80 லட்சம்




இந்த கோவில் காளையானது அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம். கொசவபட்டி, தவசிமடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி காசுகளையும், சில்வர், பித்தளை, சைக்கிள் போன்ற பல்வேறு பரிசு பொருட்களை வென்று புகழ் பெற்றுள்ளது. தொடர்ந்து அந்த காளை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு  மேளதாளம் முழங்க வான வேடிக்கையுடன், சுற்றி நின்ற பெண்களின் குழவை சத்தத்துடன் கண்ணீர் மல்க கோவிலின் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது. இந்த காளை இறந்ததால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியிருந்தது.