திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் நவக்கிரக முட்டைகோஸை பொதுமக்கள் வியந்து பார்த்தனர். வத்தலகுண்டு மதுரை சாலையில் உசிலம்பட்டி பிரிவு அருகே காய்கறி மொத்தம் மற்றும் சில்லறை வியாபார கடை வைத்திருப்பவர் செந்தில்குமார். இவர் கடைக்கு முட்டைகோஸ் பெங்களூரூவில் இருந்து வருகிறது.


விஜய் தொடங்கிய அரசியல் கட்சி - ஸ்பெயினில் இருந்து திரும்பியதும் முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னது என்ன?




இன்று காலை பெங்களூருவிலிருந்து வந்த ஒரு முட்டைகோஸ் மூடையை பிரித்துப் பார்த்தபோது அதில் ஒரு முட்டைகோஸ் நவக்கிரகம் போல 9 தலைகளோடு இருந்தது. தனது 25 வருட காய்கறி வியாபாரத்தில் இப்படி ஒரு முட்டைக்கோஸை பார்த்திராத செந்தில்குமார் அதை தனது கடையில் வைத்திருந்தார். கடைக்கு வியாபாரம் வாங்க வந்த பொதுமக்கள் நவக்கிரக முட்டைகோஸை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.


“பிரதமர் பேச்சை பார்த்தேன், படித்தேன், சிரித்தேன்”.. நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச்சு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்!




சிலர் முட்டைக்கோஸ் என்பது தெரியாமல் இது என்ன புது வகை காயாக இருக்கிறதே என்று கேட்டனர். அவர்களுக்கு செந்தில்குமார் இது பெங்களூரில் இருந்து வந்த முட்டைக்கோஸ்களில் ஒன்று என்று விவரம் கூறினார். நூற்றுக்கணக்கான காய்கறிகள் மத்தியில்  இந்த நவகிரக முட்டைகோஸை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். நவ கிரகங்களின் ஆசி இவருக்கு கிடைத்துள்ளது என்று மிகவும் மகிழ்ச்சி கொண்டார்.