திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவின் பெயரில் சின்னாளபட்டி பகுதியில் மீன் வியாபாரம் செய்து வரும் நபர்களிடம் அதிகாலை மீன்வளத்துறை மற்றும் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அழுகிய மீன்களும் மேலும் மீன்கள் கெட்டுப் போகாமல் பயன்படுத்தப்படும் ரசாயன மருந்துகளும் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனை அடுத்து அவர்களிடம் விசாரணை செய்தது திண்டுக்கல் மாநகராட்சி மையப்பகுதியில் சோலை கால் தியேட்டர் அருகே உள்ள மீன் சந்தையில் மீனை வாங்கியதாக கூறியுள்ளனர். 




சின்னாளபட்டியில் இருந்து மீன் சந்தைக்கு வந்த மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகளில் உள்ள மீன்களை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியதை அடுத்து மீன் வியாபாரிகள் அதிகாரிகளை சோதனை செய்ய விடவில்லை என்று கூறப்படுகிறது . மேலும் வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு நீங்கள் கொண்டுவந்த மருந்தை நாங்கள் வைத்து சோதனை செய்து தருகிறோம் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். அதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து ஒரு சில மீன்களில் அந்த மருந்துகளை ஊற்றியுள்ளனர். மீன்கள் அனைத்தும் சிவப்பு கலரில் மாறி உள்ளது உடனடியாக அவர்கள் வைத்திருந்த மருந்தை வாங்கி உயிருள்ள மீன்களில் மருந்தை ஊற்றியுள்ளனர்.




அந்த மீன்களும் சிவப்பு கலரில் மாறி உள்ளதால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே எங்கள் மீது புகார் கூறுகின்றனர் என்று மீன் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் கூறும் பொழுது, இறந்து போன கெட்டுப்போன மீன்களில் மருந்தை ஊற்றினால் கண்டிப்பாக தெரிந்து விடும் அதேபோல் இவர்கள் அதிகாலையில் இருந்து இந்த மீன்களை கையாண்டு வருகின்றனர். அதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் மீன்கள் ஐஸ் பெட்டியில் அடைக்கப்பட்டு ரசாயன மருந்துகள் மூலம் தான் திண்டுக்கல் சந்தைக்கு வருகிறது, அதையும் இவர்கள் கையால் பயன்படுத்தி இருப்பார்கள். இதன் காரணமாக உயிர் உள்ள மீன்களில் மருந்தை ஊற்றிய பொழுது சிவப்பு கலரில் வருகிறது.


நாங்கள் நேரடியாக சோதனை செய்தால் மீன் மார்க்கெட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியும். அதேபோல் நாங்கள் காவல்துறை அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டு செல்லவில்லை. மாவட்ட ஆட்சியர் உத்தரவு பேரில் தற்போது ஆய்வு செய்ய வந்த போது திண்டுக்கல் மீன் சந்தை வியாபாரிகள் எங்களை அனுமதிக்கவில்லை என்று கூறினர். மீன் சந்தை வியாபாரிகள் அதிகாரிகள் வேண்டுமென்றே எங்கள் மீது புகார் கூற வேண்டும் என்று இங்கு வந்துள்ளனர். மீன்களையும் இங்கிருந்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர் என்றனர். மீன் சந்தையில் காலையில் அதிகாரிகள் மற்றும் மின் சந்தை வியாபாரிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.