திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் முருகன். திமுக பிரமுகரான இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக உள்ளார். திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில் வரவு செலவு கணக்கில் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இவருக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோபால்பட்டி அருகே ஜோத்தாம்பட்டி குட்டு பகுதியில் முருகனின் ஸ்கார்ப்பியோ காருக்குள் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாணார்பட்டி போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றினர். பின் திண்டுக்கல்லில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படக் கூடாது என்பதற்காக பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட எஸ்பி.பிரதீப் தலைமையிலான காவல்துறையினர் இக்கொலையில் சம்மந்தப்பட்ட 5 பேரை கைது செய்தனர். கொலைக்கு கோவில் கணக்கு வழக்கு பிரச்சனை மட்டுமே காரணமா? தொழில் போட்டி காரணமா? அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இறந்தவர் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் இறந்தவரின் உறவினர்கள் சாணார்பட்டி காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சாணார்பட்டி போலீசார் உடலை மதுரைக்கு கொண்டு செல்லாமல் திண்டுக்கல் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் என உறுதி அளித்தது தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சாலை மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் முருகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று 5 பேரிடம் போலீஸார் விசாரணை செய்து வந்த நிலையில் இன்று கொலை வழக்கு சம்பந்தமாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், மேட்டுப்பட்டி வீரபத்திரன் (34), ரவுண்ட் ரோடு சேக் பாரீத் (29), கோவிந்தாபுரம் சரவணகுமார் (38), சங்கர் (33), செல்லாண்டியம்மன் கோயில் ராஜா (41), ஆர்.எம்.காலனி விஜய் (28), விஜயகுமார் (24), செல்லாண்டி அம்மன் கோயிலை அசோக்(41) ஆகியோரை கைது செய்த போலீஸார். கைது செய்யப்பட்ட 8 நபர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.