உடல் உறுப்பு தானம் செய்த நபருக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்த அறிவிக்கப்பட்டிருந்தது.  இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குடும்ப உறுப்பினர்கள், மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்த செயல் போற்றப்படுகிறது .


Emergency: ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு




Watch Video: குஜராத் காவல் வாகனத்தில் மது அருந்தும் கைதி - கொந்தளித்த மக்கள்..!


தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி ரெட்டியார்சத்திரம் பகுதியைச் சார்ந்தவர் உறுப்புதானம் செய்தவரின் உடலுக்கு, அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.




திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், ரெட்டியார்சத்திரம் உள்வட்டம், அழகுபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் கடந்த  (10.07.2024) அன்று பழனி பைபாஸ் அருகில் நடந்த விபத்தில் காயமடைந்து,  மதுரையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின்போது உறுப்புகள் செயலிழந்து மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.  உடல் அடக்கம் திண்டுக்கல் ஆர்.எம்.காலனி மின் மயானத்தில் (12.07.2024) பகல் 2.30 மணியளவில் நடைபெற்றது.


"அவமானப்படுத்துவது பலம் அல்ல.. பலவீனத்தின் அறிகுறி" ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக களமிறங்கிய ராகுல் காந்தி!




இறுதி சடங்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்  பூங்கொடி  நேரில் சென்று மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த ராமசாமியின் உடலுக்கு, தமிழக அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட கோட்டாட்சியர் சக்திவேல் மற்றும் அரசு அதிகாரிகள் பலர்  கலந்து கொண்டு மரியாதை செலுத்தி அவரின்  குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.