பழனி அருகே கோரிக்கடவு பகுதியில் தலை இல்லாத மனித உடலை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோரிக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட சுடுகாடு உள்ளது. இங்கு இறந்தவர்களை புதைப்பதற்கு மட்டுமே அனுமதி இருக்கிறது எரிக்கும் வழக்கம் கொண்டவர் இருந்தால் பழனியில் உள்ள நவீன எரிவாயு மயானத்தில் மட்டுமே உடலை தகனம் செய்ய முடியும் என்ற வழக்கம் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை ஆடு மேய்க்க சென்றவர்கள் சுடுகாடு பகுதியில் எரிந்த நிலையில் தலையில்லாத உடல் பகுதி எலும்பு கூடாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.


TN CM MK Stalin: “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..




இதனையடுத்து  அங்கு வந்த போலீசார் தலை இல்லாத எலும்புக்கூடை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கோரிக்கடவு பகுதியில் நேற்று முன்தினமோ யாரும் உயிரிழக்கவில்லை என்பது சொல்லப்படுகிறது. மேலும் போலீசார் விசாரணையில் எரிந்த நிலையில் கண்டெடுக்கபட்ட  எலும்புக்கூடு பெண் சிறுமியாக இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  


TN CM MK Stalin: “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..




வேறொரு பகுதியில் இருந்து கொலை செய்துவிட்டு கோரிக்கடவு சுடுகாட்டில் தலையில்லாத உடல் பகுதியை தீ வைத்து மர்ம நபர்கள் எரித்துள்ளார்களா? என்ற கோணத்தில் கீரனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பழனி அருகே தலையில்லாத எலும்புக்கூடு எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.