புதிய ஆண்டில் கொலை, கொள்ளை, குற்றச் சம்பவங்கள், அடிதடி, விபத்து போன்ற எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும் என்று வண்டிகருப்பணசாமி கோவிலில் கிடா வெட்டி, பொங்கல் வைத்து வடமதுரை போலீசார் வழிபாடு நடத்தினர்.




திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, அய்யலூரில் காவல் தெய்வமான வண்டி கருப்பணசாமி கோவில் உள்ளது. இங்கு புதிதாக வாகனம் வாங்குவோர் தங்கள் வாகனங்களை கொண்டுவந்து வழிபாடு செய்துவிட்டு பயன்படுத்த தொடங்குவர். அதேப்போல வாகன ஓட்டிகள் இங்கு வந்து வழிபாடு செய்துவிட்டு தங்கள் பயணத்தை தொடங்குவர். 


புது வருடத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கவும், கொலை, கொள்ளை, விபத்து போன்ற குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டியும் வடமதுரை காவல்துறையினர் அய்யலூர் வண்டிகருப்பணசாமி கோயிலில், பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர். அதன்பின்னர் அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது.




இந்த வழிபாட்டில் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்காதேவி மற்றும் வடமதுரை  காவல் ஆய்வாளர் ஜோதிமுருகன், வடமதுரை காவல் நிலையத்தில் பணிபுரியும்  காவலர்கள், குற்றப்பிரிவு, தனிப்படை போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.




திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மைக்கேல்பாளையத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். ஆனால் 2006-ம் ஆண்டுக்கு பிறகு மைக்கேல்பாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால் ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. நிலக்கோட்டை தாலுகாவை பொறுத்தவரை சுமார் 800 ஜல்லிக்கட்டு காளைகள் உள்ளன. இதனால் இந்த ஆண்டு மைக்கேல்பாளையத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று காளை வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.




இந்தநிலையில், மைக்கேல்பாளையத்தில், பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மைக்கேல்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், சுமார் 50-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுடன் நேற்று முன்தினம் ஊர்வலம் சென்றனர். மைக்கேல்பாளையம் மெயின் ரோட்டில் இருந்து மேளதாளத்துடன் ஊர்வலம் தொடங்கியது. அப்போது இளைஞர்கள் ஆட்டம், பாட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக காளைகளுடன் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்குள்ள மைக்கேல் அதிதூதர் ஆலயத்திற்கு காளைகளை அழைத்துச்சென்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண