இந்த இடத்தில் பழங்குடியின மக்கள் விவசாயம் செய்து அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இதனையடுத்து பழங்குடியின மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே நிலம் வாங்கியுள்ள சில மர்ம நபர்கள் இந்த இடம் முழுவதற்கும் தங்களிடம் பத்திரம் உள்ளது என்றும், பழங்குடியின மக்கள் வெளியேற வேண்டும் எனவும் தெரிவித்து சென்றுள்ளனர். இதனையடுத்து பூர்வகுடி பழங்குடியின மக்கள் தங்கள் வசிக்கும் இடத்தில் ஆதிவாசி மக்களின் கொடியை ஏற்றியும் அதே பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கருப்பு கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி தமிழக அரசுக்கு தங்கள் கோரிக்கைகளை எடுத்துச்சென்று, ஆக்கிரமிக்க முயற்சிப்பவர்களிடமிருந்து தங்களது இடத்தினை பாதுகாத்து தருமாறும், இல்லையெனில் தமிழகம் முழுவதும் அல்லாது இந்திய அளவில் மிக பெரிய போராட்டம் நடத்த போவதாக பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானலில் பழங்குடிகள் நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிக்க முயல்வதாக புகார்
மனோஜ் குமார்
Updated at:
08 Jan 2022 02:03 PM (IST)
பழங்குடியின மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே நிலம் வாங்கியுள்ள சில நபர்கள் இந்த இடம் முழுவதற்கும் தங்களிடம் பத்திரம் உள்ளது என்றும், பழங்குடியின மக்கள் வெளியேற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்
வாழைகிரி பழங்குடியின மக்கள்
NEXT
PREV
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளான மூலையாறு, வடகரைப்பாறை, அடுக்கம், பாலமலை, வாழைகிரி உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகளில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வாழைகிரி பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பூர்வகுடி பழங்குடியின குடும்பங்கள் நூற்றுக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 2006 வன உரிமை சட்டத்தின் கீழ் கடந்த 2018ஆம் ஆண்டு வனத்துறை, வருவாய்த்துறை, சமூகநலத்துறை மூலம் நில அளவை செய்து பழங்குடியின மக்களுக்கு தமிழக அரசு மூலம் இடம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - இடு பொருட்கள் விலை உயர்வு எதிரொலி - கோடை சாகுபடியை கைவிட நீடாமங்கலம் விவசாயிகள் முடிவு
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - வக்கில் நோட்டீஸ் அனுப்பிய காதலன் - மனமுடைந்த காதலில் தற்கொலை முயற்சி
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - கொடைக்கானலில் 21 சென்ட் நிலத்தினை பதிவு செய்ய மறுப்பு - போராட்டம் நடத்த ரியல் எஸ்டேட் சங்கம் முடிவு
Published at:
08 Jan 2022 02:02 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -