25 சவரன் நகையை கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு தீ வைத்து சென்ற திருடன்

’’காவல்துறைக்கு தடயங்கள் ஏதும் சிக்காமல் இருப்பதற்காக பீரோவில் இருந்த பத்திரங்கள், சான்றிதழ்கள், பட்டுப்புடவைகள், கணினி மற்றும் கைபேசி உள்ளிட்ட பொருட்கள் குவித்து தீவைத்துள்ளனர்’’

Continues below advertisement

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருநகர். இங்கு தலைமை தபால் நிலைய உதவி அதிகாரியாக மணிமாறன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் 25 பவுன் நகையை கொள்ளையடித்து மட்டுமில்லாமல் தடயங்கள் ஏதும் காவல்துறையினருக்கு சிக்காமல் இருப்பதற்காக பீரோவில் இருந்த பத்திரங்கள், சான்றிதழ்கள், பட்டுப்புடவைகள், கணினி மற்றும் கைபேசி உள்ளிட்ட பொருட்களை இரண்டு படுக்கை அறைகளில் பரவலாக வைத்து கொளுத்தி உள்ளார்.

Continues below advertisement

உற்பத்தி தொழில் தொடங்கிட 10 லட்சம் முதல் 5 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு 25 சதவீத மானியம் மற்றும் 3% வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி


இவ்வாறு தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு 10 லட்சம் வரை இருக்கலாம் என வீட்டின் உரிமையாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார். மேலும் நள்ளிரவு நடந்த இந்த சம்பவம் அருகில் இருப்பவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு மற்றும் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் மணிமாறன் மற்றும் அவரது குடும்பத்தார் உள்ளே சென்று பார்த்தபோது பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்


நாளை தஞ்சைக்கு வரும் முதல்வர் - வலுப்பெறும் கும்பகோணம் தனிமாவட்ட கோரிக்கை

மேலும் கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் விதமாக மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டு தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கைரேகை தடவியல் நிபுணர் பிரேமா உள்ளிட்ட குழுவினரை வரவழைத்து தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா என்ற நோக்கத்தில் தற்போது அதற்கான விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர். திண்டுக்கல் நகரின் மைய பகுதியாக உள்ள திருநகரில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவமானது அதிகாலை முதல் பெரும் பரபரப்பையும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

Yearender 2021: தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு நடந்த முக்கிய நிகழ்வுகள்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

 

Continues below advertisement