திண்டுக்கல்லில் விற்பனைக்கு வந்த 8 அடி உயரமுள்ள 100 கிலோ எடை கொண்ட 550 காய்களை கொண்ட அதிசய வாழைத்தாரை வியந்து பார்த்து செல்லும் பொதுமக்கள்.


திண்டுக்கல் வி எம் ஆர் பட்டியில் பாண்டி என்பவர் பழக் கமிஷன் மண்டி வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் திண்டுக்கல் பெரிய கடைவீதியில் நேற்று வாழை ஏலத்திற்கு சென்று உள்ளார் அங்கு சின்ன தாராபுரத்தில் இருந்து சுமார் அடி உயரம் உள்ள வாழைத்தார் விற்பனைக்கு வந்துள்ளது. 8 அடி உயரமும் 100 கிலோ எடையும் 550 காய்கள் கொண்ட  வாழைத்தாரை கண்டு வியந்த பாண்டி அந்த வாழைத்தாரை 1600 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து தனது கடைக்கு  விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார்.


Pongal Special Bus: தயாரா மக்களே.. பொங்கலுக்கு சொந்த ஊருக்கு ப்ளான் ரெடியா? 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை அறிவித்த தமிழக அரசு!




பொதுவாக கற்பூரவல்லி வாழைத்தார் சுமார் 4 அடி உயரத்தில் 25  கிலோவில் 180 காய்கள் இருக்கும் அந்த வாழைத்தாரானது 300 ரூபாய் முதல் 400 ரூபாய்க்கு மட்டும் விற்பனை ஆகும். ஆனால் இந்த 8 அடி உயரம் உள்ள வாழைத்தாரை 1600 ரூபாய்க்கு வாங்கி வந்து தனது கடையின் விற்பனைக்காக கடையின் முன் பகுதியில் வைத்துள்ளார் இந்த வாழைத்தாரை சாலையில் செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்திடம் வியப்புடனும் கண்டு களித்து செல்கின்றனர் .




கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர 25 வகையான கற்றாழை செடிகள் வைக்கப்பட்டுள்ளது .


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக பிரையண்ட் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு வகையிலான மலர் நாற்றுக்கள் பராமரிக்கப்பட்டு பூத்து குலுங்கும். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக வித்தியாசமான முறையில் கேக்ட்டஸ் எனப்படும் கற்றாழை செடிகள் 25 வகையில் தற்போது கண்ணாடி மாளிகை பகுதியில் வைக்கப்பட்டுள்ளது .




Outside Food In theatres : திரையரங்குகளில் உணவு பொருட்களைக்கொண்டு வரலாமா? உச்சநீதிமன்றம் அதிரடி..


இந்த வகை செடிகள் காண்போரை கவரும் வகையிலும் இருந்து வருகிறது . மேலும் வித்தியாசமான முறையில் கற்றாழை செடிகள் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளும் இதனை ஆர்வமாக கண்டு புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர் . மேலும் வரும் மே மாதம் மலர் கண்காட்சிக்காக பல்வேறு வகையான மலர்கள் பூத்து குலுங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர் .




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண