திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள லிங்கவாடியில் 2 மாதங்களுக்கு முன்பு உதயகுமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். அதில் லிங்கவாடியை சேர்ந்த நல்லியப்பன் (58), சிவம் என்ற பொன் நாட்டாண்மை (26) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பரிந்துரை செய்தார்.



இதையடுத்து ஆட்சியர் விசாகன் உத்தரவின்பேரில் திண்டுக்கல் சிறையில் இருந்த 2 பேரையும் நத்தம் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அதேபோல் பழனி தாலுகா புது ஆயக்குடி வெள்ளிபாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (32). இவர் கொலை வழக்கில் பழனி தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை பழனி தாலுகா போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.




தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட  திருவள்ளுவர் நகர் பகுதியில்  கணேசன் மகன் முட்டை கண்ணன் என்ற கண்ணதாசன் (28 வயது) என்பவர் இந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்து வரும் நிலையில், கஞ்சா போதை தலைக்கேறியதும் அரிவாளை கையில் எடுத்துக் கொண்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் யார் யாரெல்லாம் மிரட்ட வேண்டும் என்று கண்ணதாசன் நினைக்கின்றாரோ அவர்களை எல்லாம் அரிவாளை காட்டி மிரட்டி வருகின்றார்.




இதனால் அச்சமடைந்த அப்பபகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரையிலும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கண்ணதாசன் என்பவர் அந்தப் பகுதியில் அடிக்கடி அரிவாளுடன் வலம் வருவது பொது மக்களை மேலும் அச்சுறுத்தி வருவதும் தொடர்ந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கண்ணதாசன் கஞ்சா விற்பனைக்கு காவல்துறை துணை போவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.




மேலும் முட்டை கண்ணன் என்ற கண்ணதாசன் என்பவரால் அசம்பாவிதம் எதுவும்  நடப்பதற்கு முன்பு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களை அச்சத்தில் இருந்து போக்க வேண்டுமென கோரிக்கையும் விடுத்துள்ளனர். முட்டைக் கண்ணன் என்ற கண்ணதாசனுக்கு ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.




 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர