மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை பகுதியில் உள்ள சோலை அழகுபுரம் வ.உ.சி 3வது தெருவில் வசித்து வருபவர் காளிமுத்து - பிரியதர்ஷினி தம்பதி. இவர்களுக்கு 9 வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. காளிமுத்து அதே பகுதியில் தையல் கடையில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். காளிமுத்துவின் மனைவி பிரியதர்ஷினி கீழவாசல் பகுதியில் ஒரு பாத்திர கடையில் விற்பனை பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த கடந்த மாதம் 23-ஆம் தேதி இரவு இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அக்கம் பக்கத்தினர் ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டைத் திறந்து பார்த்தபோது வீட்டு பரணில் 8 வயது சிறுமி தன்ஷிகாவின் கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஒரு வாளிக்குள் அழுகிய நிலையில் இருந்ததை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை தீவிரப்படுத்தினர். விசாரணையில் கடந்த சில வருடமாக காளிமுத்தும் அவரது மனைவி பிரியதர்ஷினிக்கும் இடையே தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு நடந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், காளிமுத்துவை போலீசார் தேடி வந்தனர்.
- மதுரை : மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற 108 வீணை இசை வழிபாடு.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு !
இந்த நிலையில் நேற்று பழங்காநத்தம் பகுதியில் தலைமறைவாக இருந்த காளிமுத்தை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில், பிரியதர்ஷினியிடம் காளிமுத்துவிற்கு ஏற்பட்டு வந்த தகராறு காரணமாக, மகளிடம் புலம்பியுள்ளதாகவும், அதற்கு சிறுமியோ நாம் இருவரும் இறந்து விடுவோம் என்றும் கூறியதாகவும், இதனை அடுத்து வீட்டின் அடுப்பங்கரையில் மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பரணி மேல் வைத்த பின்னர் வீட்டை விட்டு கிளம்பி ரயிலில் விழுந்து சாகலாம் என்று முடிவெடுத்து பயத்தின் காரணமாக மதுரையில் சுற்றி திறிந்தாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து காளிமுத்தை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்