பொதுப்பணிகள் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு  மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அமைச்சர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் பலர் குறட்டை விட்டு தூங்கி வழிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம்  பொதுப்பணி துறை அமைச்சர்  எ.வ.வேலு  ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர்  மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்த சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில்  காவல்துறை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் துறை போக்குவரத்து துறை  வட்டாரப் போக்குவரத்து துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் அமைச்சர் எ.வ. வேலு  ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.



தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பை உறுதி  செய்வதற்காகவும் விபத்துகள் ஏற்படாத வண்ணம் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் விபத்துக்கள் அதிவேகத்தில் வரும் வாகனங்களால் அதிக அளவு விபத்து நடப்பதாகவும் விபத்துகளால் உயிரிழப்பை தடுக்கும் வகையில் அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தவும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் இரண்டு சதவீத தேசிய நெடுஞ்சாலைகள் இருந்தாலும் 30% இறப்புகள் ஏற்படுவதாகவும் அரசின் சாலை மூன்று சதவீதம் என்றாலும் 33 சதவீத விபத்துக்கள் ஏற்படுவதாகவும் விபத்துக்கள் தடுப்பதற்காக காவல்துறை மக்கள் நல்வாழ்வுத்துறை போக்குவரத்து துறை உள்ளிட்ட  அதிகாரிகளுடன் ஆலோசனை  கூட்டம் நடத்தப்பட்டதாகவும்,



தமிழகத்தைப் பொறுத்தவரை 2020ல்-  8500 உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் 2021ல் கொரோனா காரணத்தில் சற்று குறைந்திருந்தாலும் 2022 அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை, இந்தியாவில் சராசரியாக உயிரிழப்பு 410 ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்த வரை நாள் ஒன்றுக்கு சராசரியாக 41 பேர்  உயிரிழப்பதாகவும் தெரிவித்தார் சிவகங்கை மாவட்டத்தை பொருத்தவரை கடந்த ஆண்டு விபத்தில் 332 உயிரிழந்துள்ளார்கள் என்றார் பொதுவாக ஓட்டுநரின் கவன குறையால் தான்  அதிகபட்சமாக விபத்துக்கள் நடப்பதாக தெரிவித்தார்.


 

இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஒருபக்கம் பேசிக் கொண்டிருக்கும் போது, அதிகாரிகள் பலர் குறட்டை விட்டு தூங்கி வழிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண