பழனியில் தனியார் விடுதியில் வைத்து உல்லாசத்திற்கு அழைத்து பணம் ,செல்போனை ஆண் நண்பர்கள் மூலம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது, இரண்டு கார்கள் கத்தி செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலையத்தில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டியார் சத்திரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார்.




அதில் இரண்டு பெண்கள் தன்னை உல்லாசத்திற்கு அழைத்ததும், அப்போது அங்கு தனிமையில் இருந்தபோது தன்னை பெண்களுடன்  மறைந்திருந்த ஆண் நண்பர்கள் புகைப்படம் வீடியோ எடுத்ததாகவும் பின்னர் தன்னிடம் இருந்த செல்போன் பணம் உள்ளிட்டவையை கத்தியை காட்டி மிரட்டி பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டதாகவும் புகார் ஒன்றை அளித்திருந்தார்.


Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ




அதன் அடிப்படையில் டிஎஸ்பி தனஜெயம், ஆய்வாளர் மணிமாறன் உத்தரவின் பேரில் தீவிர போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்ததில் இன்று காலை சண்முக நதி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக இரண்டு கார்களில் வந்த ஐந்து பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் திண்டுக்கல்லை சேர்ந்த குணசேகரன் வயது 40, நத்தத்தைச் சேர்ந்த பாலமுருகன் 37,திண்டுக்கல்லை சேர்ந்த லோகநாதன் , சின்னாளபட்டியை சேர்ந்த பவித்ரா 24 , சீலப்பாடியை சேர்ந்த காமாட்சி வயது 25  ஆகியோரை மடக்கி விசாரித்தனர். அப்போது, கடந்த சில நாட்கள் முன்பு தனியார்  விடுதியில் ரமேஷ் என்பவரிடம் அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து எக்ஸ்.யூ.வி கார் கொடைக்கானலில் இருந்து நிசான் காரை திருடி வந்ததும் தெரியவந்தது .


Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!




மேலும் அரிவாள், மூன்று செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல் கொடைக்கானலிலும் சம்பவம் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பழனியில் ஆண்களை உல்லாசத்திற்கு அழைத்து ,அதை மறைந்திருந்து வீடியோ பதிவு செய்து கொண்டு கத்தியை காட்டி ஆண் நண்பர்கள் மூலம் பணம் , செல்போன் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டும் இதை வெளியே சொன்னால் ஆபாச வீடியோக்களை வெளி விடுவோம் என மிரட்டி வரும் கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.