திண்டுக்கல் மலைக்கோட்டையை அடுத்த முத்தழகுபட்டி பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அருளானந்தபாபு (29). இவர் அப்பகுதியில் கூலித்தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். அதே பகுதியில் முருகேஸ்வரி (58) என்பவர் மிட்டாய் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் குடைப்பாறைப்பட்டியில் வசித்து வருகிறார்.

இவருடைய மகன்களான சக்திவேல், தட்சிணாமூர்த்தி ஆகியோர் அருளானந்தபாபுவின் நண்பர்கள் ஆவர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேல், தட்சிணாமூர்த்தி ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இதனால் நண்பர்களின் தாயாரான முருகேஸ்வரிக்கு, அருளானந்தபாபு தேவையான உதவிகளை செய்து வந்தார்.

EPS Statement: ”இனியாவது நல்லது செய்யுங்க; தேவையில்லாமல் அதிமுகவை சீண்ட வேண்டாம்" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் அருளானந்தபாபு தனது மோட்டார் சைக்கிளில் குடைப்பாறைப்பட்டிக்கு சென்று முருகேஸ்வரியை சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்து மாலை சுமார் 3.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் முத்தழகுபட்டிக்கு திரும்பி வந்தார். முத்தழகுபட்டியை அடுத்த அகஸ்தியர்தெப்பம் பகுதியில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 இரண்டு சக்கர வாகனத்தில் 7 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி ஆகியவற்றுடன் அவரை துரத்தியது. ஏதோ விபரீதம் நடக்க போவதை அறிந்த அருளானந்தபாபு அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். ஆனால் விடாமல் துரத்திய அந்த கும்பல் சிறிது தூரத்தில் அவரை மடக்கியது.

இதனால் அருளானந்தபாபு மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு அருகில் இருந்த கருவேல மரக்காட்டுக்குள் தப்பி ஓடினார். அங்கும் விடாமல் துரத்தி சென்ற அந்த கும்பல், அவரை விரட்டி சென்று வெட்டியது. தலையில் பலத்த வெட்டுகள் விழுந்ததால் அவர் கீழே சாய்ந்தார். அதன்பின்னரும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக வெட்டியது. இதனால் அருளானந்தபாபு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக  உயிரிழந்தார்.

இந்துக்களுக்கே பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லை: நாடாளுமன்றத்தில் திருமா சொன்ன காரணம்!

அதன்பின்னரே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த வந்த காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண