தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரொனா நோய் தொற்றால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில்  நேற்றும் இன்றும்  உயிரிழப்புகள் ஏதும் இல்லை.


தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது, கடந்த ஒரு சில நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்து வந்த நிலையில் . இன்று இரு மாவட்டங்களிலும் உயிரிழப்புகள் ஏதும் இல்லை.




தற்போது ஊரடங்கு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையிலும் கூட வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது. முழு பொதுமுடக்கத்தின்போது தினசரி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மூன்று இலக்க எண்களாகவே இருந்து வந்தது. ஆனால் தற்போது தளர்வுகள் கூடிய ஊரடங்கு நாட்களில் தினசரி கொரோனா பாதிப்பு இரு இலக்க எண்களாகவே ஐம்பதுக்கும் கீழ் உள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில்  இன்று 24நபர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31853ஆக உள்ளது. இன்று மட்டும் 26நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 30993-ஆக குறைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. இதுவரையில் திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் இதுவரையில் 607 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் 253 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




தேனி மாவட்டத்தில் இன்று 25நபர்கள் கொரோனா வைரஸ் பாதிப்படைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இதுவரையில் 42650 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இன்று கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று18பேர் வீடு திரும்பியுள்ளனர். ஆதலால் தேனி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 41813ஆக குறைந்துள்ளது. தேனி மாவட்டத்திலும் இன்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை. 


மேலும் தெரிந்துகொள்ள , படிக்கவும்.


தேனி மாவட்டம் கோட்டூர் அருகே அமைந்துள்ள தர்மாபுரி கிராமத்தில் உள்ள ஆண்கள் பெரும்பாலானோர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர் கூடுதல் தகவல்களுடன்.


தேனி | தர்மாபுரி என்னும் "இராணுவ பேட்டை" : வியக்கவைக்கும் ஒரு அதிசய கிராமம்..!


 


மாற்றுத்திறனாளி சர்க்கர நாற்காலி ஓட்டத்தில் சாதிக்க துடிக்கும் கதை தேனி தமணம்பட்டியை சேர்ந்த மனோஜ்குமார்.


’பாரா அத்தலெட்டில் பதக்கம்’ அங்கீகரிக்குமா அரசு..?