திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த வாரத்தை பொருத்த வரையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 20 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32044ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று  மட்டும் 14  நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 31192 ஆக குறைந்துள்ளது.  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 617ஆக இருக்கிறது. தற்போது 135 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில்  நோய் தொற்றால்  உயிரிழப்புகள்  ஏதும் இல்லாத நிலையே நீடிப்பது குறிப்பிடத்தக்கது.



அதே போல் தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் 12  நபர்களுக்கு  நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42821-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று மட்டும் 21 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை  பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 42061 ஆக குறைந்துள்ளது. தற்போது  வரையில் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 513 ஆக இருக்கிறது. இன்று 247 நபர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் தேனி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  தேனி மாவட்டத்தில் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர்.   திண்டுக்கல் மற்றும் தேனி  இரு மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருவோர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.



மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும் 28 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73307 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 41 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 71838 -ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல்.  இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1140 இருக்கிறது. இந்நிலையில் 329 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 15 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45344-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 34 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 44497 -ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல் . இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 538-ஆக  இருக்கிறது. இந்நிலையில் 309 நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 19 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18582ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 21 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 17999-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல்.  இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 195-ஆக இருக்கிறது. இந்நிலையில் 388  நபர்கள் கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.