சனாதனத்தையும் ஹிந்து தர்மத்தையும் மறைந்த முன்னாள் முதல்வர் தலைவர் கருணாநிதி சொல்லியதை முதலமைச்சர் ஸ்டாலின் திரும்ப படித்துப் பார்க்க வேண்டும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கொடைக்கானலில் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு என் மண் என் மக்கள் யாத்திரைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை புரிந்து இருந்தார். தொடர்ந்து நேற்று நடைபயணம் முடிவடைந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். குற்றம் சாட்டுவதற்காக என்னை பற்றியும் மோடி ஐயாவை பற்றியும் சுப்பிரமணிய சுவாமி பேசி வருவதாகவும் , 2023 இல் நடைபெற்ற ஜி-20 மாநாடு சிறப்பு வாய்ந்த நிகழ்வு எனவும் , உலகத்தின் பார்வை அனைத்தும் இந்தியாவின் மீது இருப்பதாகவும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தபோது கூட ஜி 20 மாநாடு மிகப்பெரிய வெற்றி என கூறியதாகவும் , மத்திய அரசின் 7 திட்டங்களில் ஏழு லட்சத்தி ஐம்பதாயிரம் கோடி ஊழல் நடைபெற்று இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்து நிலையில் முதலமைச்சரின் புரிதல் மிக தவறாக இருப்பதாகவும், முதலமைச்சர் குற்றம் சாட்டி இருந்த நிலையில் அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து பாஜகவினர் எழுப்பி வரும் நிலையில் திமுகவினர் தான் ஊழல் செய்து வருகின்றனர் என அண்ணாமலை தெரிவித்தார் .
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாட புத்தகத்தில் 12ம் வகுப்பு புத்தகத்தில் ஹிந்து தர்மத்திற்கு பல பெயர்கள் இருப்பதாகவும் அதில் சனாதன தர்மம் ஒரு பெயராகவும் , சனாதனம் என்பது அனைவரும் சமம் எனவும் அந்த புத்தகத்தில் ஹிந்து என்பதற்கு அஹிம்சையை யார் எதிர்க்கின்றார்களோ இம்சையை எதிர்த்து அகிம்சை பக்கத்தில் யார் இருக்கின்றார்களோ அவர்களை தான் ஹிந்து என சொல்வார்கள் என ஹிந்து என்றால் எந்த ஒரு உயிரினத்திற்கும் துன்பம் கொடுக்காதவன் எனவும் பாட புத்தகத்தில் இருப்பதாகவும் கூறினார். சனாதனத்தையும் ஹிந்து தர்மத்தையும் மறைந்த முன்னாள் முதல்வர் தலைவர் கருணாநிதி சொல்லியதை முதலமைச்சர் ஸ்டாலின் திரும்ப படித்துப் பார்க்க வேண்டும் எனவும் , பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தாலும் எல்லா கட்சிக்கும் மரியாதை கொடுக்கும் எனவும் , பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா அவர்கள் தெரிவித்த கருத்திற்கு காவி என்பது செக்யூலர் என்பதற்குள் தான் போக விரும்பவில்லை எனவும் காக்கி என்பதற்கு பெரிய வரலாறு இருப்பதாகவும், திமுகவை எதிர்ப்பதனால் மட்டும் இது ஹிந்துக்களுக்கான கட்சி இல்லை எனவும் அனைவருக்கும் ஆன கட்சி என கூறினார் .
பாரதிய ஜனதா கட்சியின் ஒரே நிலைப்பாடாக ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் , ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு கலந்தாலோசித்து தான் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார் . கூட்டணி பற்றி கேள்வி எழுப்பிய போது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக மோடி வர வேண்டும் எனவும் தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மக்களுக்கு என்ன பயன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்திற்கு தீர்ப்பை முழுவதுமாக படித்த பிறகு கருத்து தெரிவிப்பதாகவும் கூறினார் . சனாதனத்தை பற்றி பிஜேபியின் ஊழலை மறைத்து வருவதாக திமுக தெரிவித்த கருத்திற்கு சனாதனத்தை பற்றி கடந்த 10 நாட்களில் முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை அதிகம் எனவும் திமுக அறிக்கை கொடுத்து என்ன பயன் எனவும் , பெரிய முதலீடு படங்களை வெளியிடுவது திமுக தான் எனவும் தெரிவித்தார் .
ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இருந்ததாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு தமிழ்நாட்டின் பெருமையை ஏ ஆர் ரகுமான் உயர்த்தி இருப்பதாகவும் அவரை வைத்து அரசியல் செய்யக்கூடாது எனவும் அவருடைய வேலை இசை அமைப்பது மக்களை மகிழ்விப்பது மட்டுமே எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் இதற்கு முக்கிய காரணம் என குற்றம் சாட்டினார். இரண்டு வருடத்தில் 99 சதவீதம் பணிகளை திமுக நிறைவு செய்து விட்டதாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி செய்ததாகவும் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து முறை திமுக முதலமைச்சராக இருந்தபோது அப்போதெல்லாம் ஒழிக்க முடியாத ஜாதி , வறுமை மற்றும் அடிப்படை வசதிகளை உள்ளிட்டவற்றை இப்போது ஒழித்து உள்ளனரா எனவும் தெரிவித்தார் .
மேலும் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த ஒரு அடிப்படை வசதி இல்லை எனவும் வாகன நிறுத்தம் வசதி இல்லாமல் இருப்பதால் மிகவும் சிரமம் அடைந்து வருவதாகவும் இதற்கு நவீன முறையில் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வனக்குழு என்ற பெயரில் செயல்பட்டு வரும் குழுக்களுக்கு முறையான கணக்கு வழக்குகள் அரசிற்கு காண்பிக்க வேண்டும் எனவும் காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நகர் பகுதிகள் மற்றும் இன்றி குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்டவற்றில் புகாமல் இருக்க நடவடிக்கை வனத்துறை மற்றும் தமிழக அரசு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்