வடமாநிலங்களில் கனமழை காரணமாக சண்டிகர் - மதுரை ரயில் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சண்டிகர் - மதுரை மற்றும் மதுரை - சண்டிகர் இடையிலான ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சண்டிகர் - மதுரை இடையே ஜூலை 10 ஆம் தேதி முதல் காலை 8.05 மணிக்கு புறப்படும் ரயிலானது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல மதுரை - சண்டிகர் இடையே ஜூலை 12 ஆம் தேதி இரவு 11.35 மணிக்கு புறப்படும் ரயிலானது ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
 
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண