அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பணியாற்றிய நேர்முக உதவியாளர்கள் தொடர்ந்து  விபத்துக்களால் இறந்ததும்,காணாமல் போனதும் தற்போதுவரை மர்மமாகவே உள்ளது. ஏற்கனவே கொடநாடு எஸ்டேட் சொத்து ஆவணங்கள்  திருடுபோன நிலையில் அப்போது இருந்த  முன்னாள் முதலமைச்சர்  ஈபிஎஸ் மேல் இந்த சம்பவம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் தற்போதும் எழுந்து வருகிறது.  



கொடநாட்டில்  திருட்டில் ஈடுபட்ட நபர்கள் மர்மமான முறையில் இறந்தது இது சம்பந்தமாக கேரளாவைச் சார்ந்தவர் ஒருவர் பரபரப்பு புகார்  தெரிவித்தது,  மேலும்  ஓபிஎஸ்   தொழில்   முறை பார்ட்னர் தேனியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் பணியாற்றிய மெக்கானிக் காணாமல் போனது என பல வழக்குகளை விசாரிக்கும் சிபிசிஐடி போலீசார் தற்போது வரை இந்த இறப்புகள் குறித்து  துப்புதுலக்கவில்லை.



இதற்கிடையில் ஓபிஎஸ்-ன் பினாமியான தொழிலதிபர் ஒருவரின் கம்பெனி, குவாரி மேலாளராக பணி  புரிந்தவரின் கொலை சம்பவம் என முக்கிய கணக்கு  வழக்குகளை நன்கு தெரிந்த நபர்கள் மர்மமான முறையில் இறப்பது போன்ற சம்பவங்கள் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அப்போது ஆளும் கட்சியாக இருந்ததால் மேற்படி வழக்குகள் விசாரணை கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக அரசு மேற்கண்ட வழக்குகளை தூசி தட்டி எழுப்புவதாக தெரிகிறது.


ஓபிஎஸ்-ன் உடன் பிறந்த தம்பி ஓ.ராஜா கைலாசப்பட்டி கோவில் பூசாரி கொலை வழக்கு என பல்வேறு வழக்குகளை ஓபிஎஸ்க்கு எதிராக தூசு தட்டியுள்ளதாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்ன் செல்வாக்கு வெகுவாக குறைந்துள்ள நிலையில் ஒரு புறம் ஆளுங்கட்சியின் நெருக்கடி ஒருபுறம் அதிமுகவின் உள்கட்சி பூசல் சசிகலாவின் தொந்தரவு என பல்வேறு சிக்கலில் சிக்கியுள்ளார் ஓபிஎஸ் என கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.



இது ஒரு புறம் இருக்க அதிமுகவில் இருந்து அமமுகவிற்கு மாறி, தற்போது திமுகவில் சேர்ந்து போடி தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்ட தங்கம் திமுகவின் வடக்கு மாவட்ட செயலாளர் என்ற பேரில் ஓபிஎஸ்சின் தொகுதியான போடி தொகுதியில் தற்போது தொகுதி வேலையில் ஈடுபடுவது ஓபிஎஸ்சிற்கு கூடுதல் குடைச்சல் என பேசப்படுகிறது.


 


ஆட்சி அமைத்திருக்கும் திமுக அரசு கனிமவளக்கொள்ளையை தடுக்குமா


தெரிந்துகொள்ள படிக்கவும்,


கனிம வளம் கொள்ளை, புரளும் கரன்சி’ கண்டுக்கொள்ளுமா அரசு..?


காலையில் வெறும் வயிற்றில் டீ,காபி,வடை சாப்பிடுவது உடம்புக்கு கேடு, டீ கடையின் வசனம்.


படிக்க,


டீ ,காபி ,வடை வியாதிக்கு முதல்படி! வாசலில் அலர்ட் வாக்கியம்..! தேனி டீக்காடைக்காரரின் ஸ்வீட் ட்விஸ்ட்..!